தமிழின் பெருமை கூறும் “தமிழ் என்று தலை நிமிர்” பாடல்

1813

உமாகரன் ராசையாவின் “வெற்றி விநாயகன்” தயாரிப்பில் “தமிழ் என்று தலை நிமிர்” பாடல் வெளியாகியுள்ளது. தமிழின் வரலாறு கூறும் பாடலாக அமைந்துள்ள இப்பாடல் இன்றைய இளம் சமுதாயத்திற்கு மிகவும் அவசியமான பாடலாக அமைந்துள்ளது.

இளம் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து மிகவும் அற்புதமாக உருவாக்கியிருக்கும் இப்பாடலின் வரிகள் மற்றும் இயக்கம் ஏ.வாகீசன். இசை ஜெயந்தன் விக்கி. பாடியவர்கள் ஜெயந்தன் விக்கி, ஏ.வாகீசன் மற்றும் எஸ்.மிதுலா.

பாடலை மிக அருமையாக ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு செய்திருக்கின்றார் வீ.ஜீவராஜ். பாடலில் வாகீசன் மற்றும் ஜனுசன் (மொட்டை) ஆகியோர் தோன்றி நடித்திருக்கிறார்கள்.

இப்பாடல் வெளியாகிய தருணத்தில் ஒரு சோக சம்பவமும் பதிவாகியுள்ளது. அதாவது இப்பாடலில் தோன்றி நடித்த ஜனுசன், அண்மையில் வவுனியா -கனகராயன்குளம் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் அகால மரணம் அடைந்துள்ளார்.

தமிழின் மீதும், சினிமா மீதும் தீராத பற்றுக் கொண்ட அவரது மறைவு படக்குழுவை மிகவும் கவலையடையச் செய்துள்ளது. உயிரிழந்த நண்பனுக்கு சமர்ப்பணமாக இப்பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.