“வேனு குடுத்த இலக்கம்” – இவன் விவகாரமான கார்த்திக்!

682

கொரோனா முடக்க காலத்தில் “கார்த்திக் டயல் செய்த எண்” என்ற குறும்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி பெரும் விமர்சனத்தை உண்டு பண்ணியது. அதனைத் தொடர்ந்து பலரும் அப்படத்தை நையாண்டி செய்து தங்கள் கற்பனைகளை கலந்து வித்தியாசம் வித்தியாசமாக குறும்படங்களை பதிவேற்றி வருகின்றார்கள். அதில் பல படங்கள் spoof வகையறாக்கள் என்றாலும் சில படங்கள் “அட” போட வைக்கின்றன.

அவ்வாறு “கப்பிடல் டி.வி.” தயாரிப்பில் ஸ்ரீ துஸிகரனின் எண்ணத்தில் உருவாகியுள்ள குறும்படம் தான் “வேனு குடுத்த இலக்கம்”. “கார்த்திக் டயல் செய்த எண்”, “96” ஆகிய படங்களின் சாயல் உள்ள வகையில், Ex girl friend or boy friend இன் நினைவுகள் வராதபோல குடும்பங்களில் கணவன் – மனைவி அந்நியோன்னியமாக இருக்கப்பழக வேண்டும் என்ற மெசேஜ் உடன் படத்தைக் கொடுத்துள்ளனர் துஸிகரன் அன்ட் டீம்.