விரைவில் ஜீவானந்தன் ராமின் ‘தனியாய்’ காணொளிப்பாடல்

429

அடுத்தடுத்து பாடல்கள் வெளியீடு என பிஸியாக இருப்பவர் இசையமைப்பாளர் ஜீவானந்தன் ராம். இவரின் அண்மைய வெளியீடான ‘தூரம் போகாதே’ பாடல் பலரையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் தனது புதிய பாடலுக்கான அறிவிப்பை அவர் நேற்று (10.06.2020) வெளியிட்டுள்ளார். இப்பாடலுக்கான வரிகளை ராய் எஸ் சலோம் எழுதியுள்ளதுடன் இலங்கையின் முன்னணிப்பாடகர்களில் ஒருவரான சுதர்சன் ஆறுமுகம் மற்றும் அதிதி திவ்யா ஆகியோர் பாடியுள்ளனர்.

காணொளிப்பாடலாக வெளியாகவுள்ள இப்பாடலை மாதவன் மகேஸ்வரன் இயக்கியுள்ளதுடன், படத்தொகுப்பாளராகவும் பணி புரிந்துள்ளார். ஒளிப்பதிவு சேனாதி சேனா. ஜோயல் மற்றும் கமலினி ஆகியோர் இப்பாடலில் தோன்றவுள்ளனர்.