“பேச மறுப்பதென்ன” பாடல் ஜூலை 5ஆம் திகதி வெளியீடு

435

ஷஜீவன் லோகநாதன் மற்றும் சகிஷ்ணா சேவியர் ஆகியோரின் தயாரிப்பில் எஸ்.என்.விஷ்ணுஜனின் இயக்கத்தில் உருவான “பேச மறுப்பதென்ன..!” காணொளிப்பாடல் எதிர்வரும் 5 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பாடல் குழு அறிவித்துள்ளது.

வருண் துஷ்யந்தனின் வரிகளில் உருவான இந்தப் பாடலுக்கு சகிஷ்ணா சேவியர் இசையமைத்துள்ளார். சூப்பர் சிங்கர் மூலம் புகழ்பெற்ற ஆனந்த் அரவிந்டக்ஷான் மற்றும் ஸ்ரீநிசா ஆகியோர் இந்தப் பாடலைப் பாடியுள்ளனர்.

ட்ரியல் டக், தரு கங்காதரன், கோடீஸ்வரன், சங்கீதா ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் பாடலுக்கான ஒளிப்பதிவு அச்சுதன். படத்தொகுப்பு மற்றும் இயக்கம் எஸ்.என்.விஷ்ணுஜன். விரைவில் (05) இந்தப் பாடல் நம் கண்களுக்கு விருந்தளிக்கவுள்ளது.