க்ரிஷ் இன் “அன்றில்” இசை வெளியீடு இன்று வவுனியாவில்

149

கே.ஆர்.புரொடக்ஷன் சார்பில் தயாராகிவரும் முதல் திரைப்படத்திற்கு “அன்றில்” எனப்பெயரிட்டிருக்கின்றார்கள். இந்நிலையில், அதன் இசை வெளியீடு இன்று சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று இடம்பெறவிருக்கின்றது.

ரி.ரிஷாந்தன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை அலெக்ஸ் கோபி கவனித்துள்ளார். திஷோன் விஜயமோகன் இசையமைத்துள்ளார்.

க்ரிஷ், ஒனெல்லா மெலனி பிரதான வேடத்தில் நடிக்கும் இத்திரைப்படத்தில் மாணிக்கம் ஜெகன், மகாலிங்கம், அஜந்தன் சிவா, வில்லன் உதீப், டில்கி திசாநாயக்க, ரூபன் சிவா, தர்ஷி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அபிஷன், கீர்த்தி, சேதுகுமரன் ஆகியோர் இதில் உதவி இயக்குனர்களாக பணியாற்றியிருப்பதுடன், ருக்ஷான் உதவி ஒளிப்பதிவாளராக கடமையாற்றியுள்ளார். ஒப்பனை காயத்ரி, தயாரிப்பு நிர்வாகம் கபில் மற்றும் ராதா. இணை இயக்குனர் விதுர்ஷன் கணேஷ்.

“அன்றில்” திரைப்படத்தில் இடம்பெற்ற “அவள் தானோ..” என்ற பாடலை லயோன் எழுதியுள்ளார். இதனை சூப்பர் சிங்கர் புகழ் தென்னிந்திய பின்னணிப்பாடகர் சத்யபிரகாஷ் பாடியுள்ளார். பாடலின் Lyrical Video இன்று வெளியாகவுள்ளது.

இன்று மாலை வவுனியா வசந்தி திரையரங்கில் இத்திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் கலைஞர்கள் அறிமுகம் நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.