R.j நெலு நடிப்பில் “Buy 1 Get 1 Free” நகைச்சுவைக் குறும்படம்

196

ஈகிள் ஸ்ரூடியோ தயாரிப்பில் மைக்கேல் காந்தகரனின் இயக்கத்தில் இலங்கை மற்றும் இந்தியக் கலைஞர்களின் பங்கேற்புடன் “Buy 1 Get 1 Free ” குறுந்திரைப்படம் வெளியாகியுள்ளது.

தற்சமயம் இந்திய பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் “எதிர்நீச்சல்” தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் ஈழ நாயகன் R.j நெலு பிரதான பாத்திரத்தில் இதில் நடித்துள்ளார்.

அவருடன் ஆர்த்திகா ரமேஷ், பத்மா, ஹனுஷ் நதானி, நிபுனா விஜயசிங்க, டாக்டர் பிலிப் மற்றும் மைக்கேல் காந்தகரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

கதை R.j நெலு, திரைக்கதை & வசனம் ஜோன்சன் மேகநாதன் மற்றும் மைக்கேல் காந்தகரன், உதவி இயக்குனர்கள் நிபுனா விஜயசிங்க மற்றும் டிலக்சிகா யோகஜீவன். இணை இயக்குனர் ஜோன்சன் மேகநாதன்.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு & DI ரொபின்சன்,இசை: விஜய் வீரபாண்டியன். இக்குறும்படம் இந்தியாவில் படமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.