தாமரையின் வரிகளுக்கு ஈழத்தில் இருந்து குரல் – Vaseekara Cover Song

2618

2001 ஆம் ஆண்டு ‘மின்னலே’ திரைப்படத்தினூடாக கௌதம் வாசுதேவ் மேனன் என்கிற இயக்குனரும், ஹாரீஸ் ஜெயராஜ் என்ற இசையமைப்பாளரும் தமிழ்த்திரையுலகிற்கு கிடைத்தார்கள்.

அதன் பின் பல படங்களில் இவர்கள் பணியாற்றினாலும், இவர்களின் முதல் படத்தில் தாமரையின் வரிகளில் இடம்பெற்ற ‘வசீகரா’ பாடல் மட்டும் இன்றும் மிகப்பிரசித்தமானது. எங்கோ ஒரு மூலையில் இப்பாடல் ஒலித்தால் கூட எங்களை அறியாமலே மனம் அதில் லயித்து விடும். ஹிந்தியில் இப்படம் ரீமேக் செய்யப்பட்ட போது, பாடலும் ரீமேக் ஆகி அகில இந்திய அளவில் பிரசித்தம் பெற்றது.
இதற்கு ஏராளமான ‘cover version’ கள் இதுவரை வெளிவந்துள்ளன. அப்படி மிக அண்மையாக ஈழத்தில் இருந்து வெளிவந்திருக்கின்றது வாகீசனின் ‘Vaseekara cover version’.

சுபாங்கி துரை இன் தயாரிப்பு மற்றும் உமாகரன் ராசையாவின் அனுசரணையில் வெளியாகியுள்ள இந்தப் பாடலுக்கான இசை திஷோன் விஜயமோகன். பாடகர்கள் ஜெயந்தன் விக்கி மற்றும் வாகீசன் ரா அருள் (ராப்). ஏற்கனவே, மெல்லிசையாக கேட்டு ரசித்த இப்பாடலில் வாகீசனின் ராப் வரிகள் வரும்போது வித்தியாசமான உணர்வை ஏற்படுத்துவதுடன், ரசிக்கவும் வைக்கிறது.

காணொளிப்பாடலின் தோற்றி நடித்திருக்கிறார்கள் சுஜீகரன் மற்றும் ரானு ரானுஷ். இப்பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு ஜீவராஜ். பாடலின் ரசனை கெடாத வண்ணம் அது காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.