முகவரியற்றவர்களின் கதை பேசும் நவயுகாவின் “சிவப்புப்பெட்டி” குறும்படம்

112

Agna Film Productions சார்பில் நவயுகா குகராஜாவின் தயாரிப்பு மற்றும் எழுத்து – இயக்கத்தில் வெளியாகியுள்ள குறும்படம் “சிவப்புப்பெட்டி”.

இந்தக்குறும்படத்திற்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பினை ஜோசுவா ஹெபி மேற்கொண்டுள்ளதுடன், எம்.சி ராஜ் இசையமைத்துள்ளார்.

ஏகே. இளங்கோ, சுப்பையா மனோகரன், அஞ்ஜனன் மாணிக்கவாசகர், ஆர்.எஸ்.கேதீஸ்வரன், ஜூலியானா ஜோன்பிலிப் மற்றுமு் ரினோ ஷாந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

கலை இயக்கம் ரொஸாரி நொவாஹ், ஒப்பனை திரன் சஞ்ஜய, உடைகள் நவயுகா, டைட்டில் டிஸைன் கோபிரமணன், தயாரிப்பு முகாமை தர்மலீலா.

இந்தியாவில் இருந்து தோட்டத்தொழிலாளர்களாகக் கொண்டு வரப்பட்டு பல இன்னல்களை அனுபவித்த மலையக மக்களின் “முகவரியற்ற“ கதையை முடிந்தவரை இக்குறும்படத்தில் உணர்வுடன் சொல்லியிருக்கின்றார் இயக்குனர்.

படத்திற்கு நடிப்பு பக்க பலம். உயிரோட்டமாக கதைக்கு தம் நடிப்பின் மூலம் வலுச்சேர்த்திருக்கிறார்கள் கலைஞர்கள். மூன்று கால இடைவெளிகளை காட்டும் விதத்திலான கலை இயக்கமும் அதற்கு தேவையான ஒளிப்பதிவு மற்றும் வர்ணச்சேர்க்கையும் அபாரம்.

நிறைவான ஒரு படத்தை தந்திருக்கக்கூடிய இயக்குனர் நவயுகா மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

Art Direction: Rozary Novah
Costume: Navayuga Kugarajah
Make up: Thiran Sanjaya
Gaffer: Sathyavignesh Shekar
Live Sounds: Mithun Karunathilaka
Title Design: Goabi Ramanan.P
Art Assistant: Jason Denwar
Production Manager: K.Dharmaleela
Production Assistants: K.Kalaatharshani | Chamodi Nurenika