திஷோன் இசையில் ரெஜி செல்வராசா இயக்கத்தில் “இனியாள்” பாடல்

229

அருள் தேவா புரொடக்ஷன்ஸ் சார்பில் அருள் தேவாவின் தயாரிப்பில் இலங்கேயன் பிக்சர்ஸ் ரெஜி செல்வராசாவின் ஒளிப்பதிவு – படத்தொகுப்பு மற்றும் இயக்கத்தில் காதலர் தின வெளியீடாக வெளிவந்துள்ள பாடல் “இனியாள்”.

இந்தப்பாடலுக்கு திஷோன் விஜயமோகன் இசையமைத்திருப்பதுடன், வாகீசன் ராசையா பாடலை எழுதியுள்ளார். சுதர்ஷனா ஜெயரட்னம் மற்றும் அருணன் சுரேந்திரன் ஆகியோர் பாடியுள்ளனர். ராப் வரிகளை வாகீசன் ராசையா பாடியுள்ளார்.

காணொளிப்பாடலில் அருள் தேவா மற்றும் ராஜேந்திரன் சுபத்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.

உதவி ஒளிப்பதிவாளராக திலோஜனும், தயாரிப்பு முகாமையாளராக சுவிகரனும் வர்ணச் சேர்க்கையாளராக (DI) யசோதா தனுபமவும் பணியாற்றியுள்ளனர். டிசைன்ஸ் மதுஷ் JM.

Music : Thishon Vijayamohan
Lyrics & rap : Vaaheesan Rasaiya Arul
Vocals : Shadhurshana Jeyaratnam , Arunan Surenthiran
Direction DOP & Edit : Reji Selvarasa
Cast : Arul Theva Rajendran Subathra
Associate camera : Thilojan VM
Production manager : Suvikaran Msk
Publicity designer : Mathus JM
DI – Yashoda Dhanupama