சுதந்திர தினத்தில் வெளியாகியது பிரவீனின் “நகர லயம்” குறும்படம்

159

WINDSOR புரொடக்ஷன் தயாரிப்பில் பிரவீன் கிருஷ்ணராஜாவின் இயக்கத்திலும் எழுத்திலும் உருவாகி திரை கண்ட “நகரலயம்“ குறும்படம் கடந்த சுதந்திர தினத்தன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

சச்சின் செந்தில்குமரன், வேணுகா ரட்ணம் ஆகியோர் பிரதான பாத்திரமேற்று நடித்துள்ள இப்படத்தில் வி.டி.போல்ராஜ், ராகுல் பாக்கியராஜா, பி.ரி.செல்வம் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் ஒளிப்பதிவை தீகாயு திசாநாயக்க மேற்கொண்டிருப்பதுடன் ஏஞ்சலோ ஜோன்ஸ் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். அனுஷான் நாகேந்திரன் இசையமைப்பாளராக இணைந்துள்ளார்.

மேலும் நகரலயம் குறும்படத்தில் உதவி இயக்குனர்களாக கௌதம் மற்றும் குட்வின் ஆகியோர் பணியாற்றியிருப்பதுடன், ஒப்பனைக் கலைஞராக விதுர பணிபுரிந்துள்ளார். SFX பணிகளை ஏ.ஜே.ஷங்கர்ஜன் கவனித்துள்ளார்.

கடந்த நவம்பர் 2 ஆம் திகதி மாலை 04 மணிக்கு Colombo City Centre இல் அமைந்துள்ள Scope Cinemas இல் அரங்கு நிறைந்த ரசிகர்களுடன் இக்குறும்படம் திரையிடப்பட்டிருந்ததுடன், பின்னர் மலையகத்திலும் திரையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Directed by – Praveen Krishnaraja
Director of Photography – Deegayu Dissanayake
Music – Anushan Nagendran
Cast – Sachin , venuka , V.D.Paulraj ,Ragul pakiyaraja , P.T selvam
Editor- Anjelo Jones
Art – All the technicians
Action – Praveen krishnaraja
dialogue – Praveen Krishnaraja
Make up – Vidura Abedeera
SFX -A J Shanggarajan
Sound Engineer – Thinesh Na
Stills – Godwin
Publicity design – Yasir Nizardeen
Title designer – Rajeewan Thayaparan