சாயிதர்சனின் “மனசெல்லாம்” Lyrical Video

376

யாழ். மண்ணின் புகழ்பூத்த இசை ஜாம்பவான் “இசைவாணர்” கண்ணனின் புதல்வரான சாயிதர்சன் தற்சமயம் தமிழ்நாட்டில் வசித்து வருவதுடன் இசையமைப்பாளராகவும், இசைப் பொறிநுட்பவியலாளராகவும் திகழ்ந்து வருகின்றார்.

இவரது இசையில் உருவாகியுள்ள புதிய பாடல் “மனசெல்லாம்”. இதன் வரி வடிவம் (lyrical video) நேற்று வெளியாகியுள்ளது. டிலீப் வர்மனின் குரலில் மனதை மயக்கும் மெலோடி பாடலாக அது பலரையும் வசீகரித்திருக்கின்றது.

டிலீப் வர்மனை பலரும் மறந்திருக்க மாட்டார்கள். அவரது “கனவெல்லாம்” இசைத்தொகுப்பில் 10 வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த “கனவெல்லாம் நீதானே..” பாடல் பல மில்லியன் பார்வையாளர்களுடன் யு-ரியூப்பில் இன்றும் வெற்றி நடை போடுகின்றது. இந்நிலையில், “மனசெல்லாம்” பாடல் மூலம் அவர் மீண்டும் நம்மவர்களை நெருங்கியுள்ளார்.