காதலின் ரிவெஞ்ச் “காதல் போதும்” பாடல்

649

அருள் செல்வம், கிரிஷ்டினா கிரேஸ், விஜய் M.P நடிப்பில் மைக்கேல் காந்தகரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள பாடல் “காதல் போதும்”.

ஜீவானந்தன் ராம் இசையமைத்துள்ள இந்தப்பாடலுக்கான வரிகளை அருள் செல்வம் எழுதியுள்ளதுடன், சுதர்சன் ஆறுமுகம் மற்றும் ஜீவனந்தன் ராம் ஆகியோர் பாடியுள்ளனர்.

காணொளிப்பாடலுக்கான ஒளிப்பதிவினை வனிஷா ஷெர்லி மேற்கொண்டிருப்பதுடன், அருள் செல்வம் படத்தொகுப்பு பணிகளைக் கவனித்துள்ளார்.

“உண்மைச் சம்பவத்தை தழுவியது” என ஆரம்பிக்கும் இந்தப்பாடல் காதலால் ஏமாற்றப்பட்ட காதலன் தன் காதலியை பழிவாங்குவதாக அமைகின்றது. பழிவாங்கல் என்பது உயிரைப்பறிப்பதாக இல்லாமல் பணத்தைப்பறிப்பதாக முடிகின்றது.

அருள் செல்வத்தின் “டச்“ இல் ஒரு பாடல், அதைச்சுற்றி ஒரு கதை என பாடலை அழகாக இயக்கியிருக்கிறார் இயக்குனர். ஒப்பனை உள்ளிட்ட பிற விடயங்களிலும் கொஞ்சம் கூடிய கவனம் செலுத்தியிருக்கலாம்.

நாயகனின் பார்வையில் வரிகள் எழுதப்பட்டிருக்கின்றன. காதலின் ஏமாற்றம் புரிகிறது. குரலும் இசையும் பாடலுக்கு பக்க பலம். வாழ்த்துக்கள் பாடல் குழுவினர்க்கு..