காரை சிவநேசனின் “புஷ்பக27” திரைப்பட ட்ரெயிலர் வெளியீடு

574

ராவணா விஷன் தயாரிப்பில் காரை சிவநேசன் இயக்கத்தில் உருவாகிவரும் “புஷ்பக27” திரைப்படத்தின் ட்ரெயிலர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 13 ஆம் திகதி யாழ். தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற “குவியம் விருதுகள் 2023” நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டு ட்ரெயிலரை வெளியிட்டு வைத்தனர்.

பெருமளவு கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகிவரும் இந்த திரைப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் மற்றும் கலை இயக்கம் ஆகியவற்றை சத்தியா மென்டிஸ் கவனித்துள்ளார். படத்தொகுப்பு மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் படத்தினை இயக்கியுள்ளார் காரை சிவநேசன்.

ஒளிப்பதிவு பணிகளை லக்ஷ்மன் ராஜ் மேற்கொண்டுள்ளதுடன், ஜெரி ஸ்டலின் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், “யு” தணிக்கைச் சான்றிதழும் படத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

செப்டெம்பர் 2 முதல் இந்தப்படத்தை திரையரங்குகளில் காண முடியும் என்று படக்குழு அறிவித்துள்ளது.