குவியம் மொபைல் குறும்படப்போட்டி 2023- முடிவுத்திகதி நீடிப்பு

431

குவியம் மீடியா பெருமையுடன் நடாத்துகின்ற “மொபைல் குறும்படப்போட்டி 2023“ இன் விண்ணப்ப முடிவுத்திகதி நாளையுடன் (மார்ச் 01) நிறைவடைகின்ற நிலையில், படைப்புக்கள் வந்து சேர வேண்டிய இறுதித்திகதி மார்ச் 07 வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

பல இளம் படைப்பாளிகளின் கோரிக்கைக்கு அமைவாக இந்த குறுகிய கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், இதில் எந்தவொரு மாற்றமும் இனி மேற்கொள்ளப்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

விரைவில் இந்த குறும்படப்போட்டியின் வெற்றியாளர்களைத் தீர்மானிக்கும் நடுவர் குழாமை நாங்கள் அறிவிக்க இருப்பதுடன், பரிசளிப்பு தினம் பற்றிய அறிவிப்பையும் பகிர்ந்து கொள்ள உள்ளோம்.

மொபைல் குறும்படப்போட்டி பற்றிய மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் பண்ணவும். (முன்னர் வெளியிடப்பட்ட செய்தி)

#038;feature=oembed" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen>