மற்றுமொரு சர்வதேச விருதை வென்றுள்ளது விமல்ராஜின் ‘வெள்ளம்’ குறும்படம்

585

அந்தமான், நிகோபார் சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர்கள் விருதைச் சுவீகரித்துள்ளது ஈழத்துக்கலைஞன் விமல்ராஜ் இயக்கத்தில் உருவான ‘வெள்ளம்’ குறும்படம். இந்த விருது இக்குறும்படத்திற்கு கிடைத்த மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம் ஆகும்.

‘வெள்ளம்’ குறும்படத்திற்கு அண்மையில், தமிழ்நாடு திரைப்பட விழாவிலும் விருது கிடைத்தது. இவ்விழாவானது சென்னையில் கடந்த ஐப்பசி மாதம் 25 திகதி முதல் கார்த்திகை மாதம் 22 திகதி வரை சிறப்பாக நடைபெற்றது.

இதில் முழு நீளத்திரைப்படங்கள், ஆவணப்படங்கள், அனிமேஷன் படங்கள், குறுந்திரைப்படங்கள், காணொலிப்பாடல்கள், மற்றும் விளம்பரப்படங்கள் என்று 52 நாடுகளிலிருந்து 298 படங்கள் தெரிவாகியிருந்த நிலையில் நம்நாட்டுக் கலைஞன் விமல்ராஜின் ‘வெள்ளம்’ குறுந்திரைப்படம் சர்வதேச ரீதியில் சிறந்த குறுந்திரைப்படத்திற்க்கான ‘பார்வையாளர்’ விருதினை வென்றுள்ளது.