வெளிநாட்டு மாப்பிளைகளால் பாதிக்கப்படும் உள்ளூர் கட்டிளம் காளைகள் – “சீமாட்டி” பாட்டை ஒருக்கா கேளுங்கோ!

314

“இளந்தாரி” பாடலின் வெற்றியைத் தொடர்ந்து இளந்தாரி லதீப்பாகவே மாறியிருக்கும் பாடலாசிரியர் லதீப் பாலசுப்ரமணியம் எழுதியுள்ள அடுத்த பாடல் “சீமாட்டி”.

இந்தப் பாடலுக்கான இசையை கிங் ராஜன் அமைந்துள்ளதுடன், ரமணன் பாடியுள்ளார்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இப்பாடலில் ஹோப் லெஸ் கஜன் மற்றும் ஜெனிபர் சாரா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர். கண்ணா உதய்யின் கலக்கல் நடனத்துடன் பாடலை இயக்கியிருக்கின்றார் புவிகரன்.

கதிரின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பில் உருவான இந்தப் பாடலை ஈசன் சரண் தயாரித்துள்ளார். ARC Mobile Production விளம்பர அனுசரணையை வழங்கியிருக்கின்றது.

ஒரு வெளிநாட்டு மாப்பிளையாக இருந்து கொண்டு இப்பிடி எல்லாம் எழுத லதீப்புக்கு எப்பிடித்தான் மனசு வந்திச்சோ தெரியல.. உள்ளூர் கட்டிளம் காளைகள் சார்பாக எழுதியிருக்கிறார் போல இருக்கு..

வெளிநாட்டு மாப்பிள்ளை என்ன வானதிலிருந்து குதிச்சவனா
இங்கிருக்க மாப்பிளயெல்லாம் இளிச்சவாயனா
மகராணி என்ட நினப்பில் ஏரோபிளேன் ஏறுறியா
வேலக்காறி தான்டி நீயும் செல்லடி கெதியா

வரிகள்:- இளந்தாரி லதீப்
இசை:-கிங் ராஜன் Djtsrajan Djts
குரல்:- இளந்தாரி ரமணன் Raam Ramanan
ஒலிக்கலவை:-பிரசாத் Rwin Prasath Prasath
தயாரிப்பு:- ஈசன் சரண் Eesan Saran
இயக்கம்:- புவிகரன் Puvi Karan
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு:-கதிர் Rajasekaram Kathirsan
நடன இயக்கம்:- கண்ணா உதய் Kanna Uthay
நடிகர்கள்:- Hope Less Kajan , Jenifer Shara Isaiyalan Newton Sri Nirusan
ஒப்பனை:- பிரியங்கா Puvi Piri
கலை இயக்கம்:- ஜெஸ்ரின் Jestin Peter
விளம்பர அனுசரனை ARC MOBILE PRODUCTION Arc Eelam Stars