குவியம் மொபைல் குறும்படப்போட்டி 2023 – சிறப்புத் தெரிவுகள்

259

குவியம் மீடியா பெருமையுடன் நடாத்தியுள்ள “குவியம் மொபைல் குறும்படப்போட்டி 2023“ இல் முதல் 10 இடங்களுக்குள் வந்த குறும்படங்கள் குறித்த அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டிருந்தோம். இணைப்பு

அந்த வகையில், தற்போது எமக்கு கிடைக்கப்பெற்ற குறும்படங்களில் இருந்து சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய கலைஞர்களுடைய விபரங்களை வெளியிடுகின்றோம். இவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.

சிறந்த நடிகர் – கண்ணா (பந்தயம்)

சிறந்த நடிகை – சங்கீர்த்தனா (மெய்யறியாமை கொளல்)

சிறந்த ஒளிப்பதிவாளர் – கவிவர்மன் (யாவரும் கேளீர்)

சிறந்த படத்தொகுப்பாளர் – கெனிஸ்டன் ஜோன் (30 செக்கன்ஸ்)

சிறந்த இசையமைப்பாளர் – சஞ்ஜீத் லக்ஷ்மன் (வசம்)

சிறந்த குழந்தை நட்சத்திரம் – கவிஷ்கர் (போதையின் கூலி)

சிறந்த இயக்குனர் – விழா நாளில் அறிவிக்கப்படும்.

முதல் 03 இடங்களையும் பெறும் குறும்படங்கள் விருது விழாவில் அறிவிக்கப்படும் என்பதுடன் அந்த மூன்று குறும்படங்களும் அங்கு திரையிடப்பட்டு அது தொடர்பிலான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.

முதல் பரிசு: ரூபாய் 50,000 மற்றும் வெற்றிக்கேடயம்
இரண்டாம் பரிசு: ரூபாய் 30,000 மற்றும் வெற்றிக்கேடயம்
மூன்றாம் பரிசு: ரூபாய் 20,000 மற்றும் வெற்றிக்கேடயம்

விருது விழா தொடர்பிலான மேலதிக விபரங்கள் நாளை அறிவிக்கப்படும்.