தமிழ் – சிங்கள மொழிகளில் வெளியாகியுள்ள பூவன் மதீசனின் பாடல் “முதல் கனவே – සුරඟන ඔබමයි”

208

TRM PICTURE CANADA INC தயாரிப்பாக பூவன் மதீசனின் இசையில் பிரகாஷ் ராஜா இயக்கத்தில் வெளிவந்துள்ள பாடல் “முதல் கனவே”.

இந்தப்பாடலுக்கான வரிகளை கே.எஸ்.சாந்தகுமார் எழுதியிருப்பதுடன் துஷ்யந்தன் பாடியுள்ளார்.

காணொளிப்பாடலில் சச்சின், விதுர்ஷா, நவம், ஜீன், கதுர்சினி ஆகியோர் முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். அருள் செல்வம் ஒளிப்பதிவையும் எஸ்.தனுஷன் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர்.

வெறுமனே பாடலாக இதைக்காட்சிப்படுத்தாமல் அதனைச் சுற்றி ஒரு திரைக்கதை அமைத்து 12 நிமிடத்தில் ஒரு குறும்படமாகவே இதனை தந்திருக்கின்றார்கள் பாடல் குழு. வித்தியாசமான முறையில் இதனை எழுதி இயக்கியிருக்கின்றார் பிரகாஷ் ராஜா.

தமிழ் – சிங்கள புத்தாண்டு வெளியீடாக வந்த இந்தப்பாடலை சம நேரத்தில் சிங்கள மொழியிலும் (Surangana Obamai | සුරඟන ඔබමයි) வெளியிட்டிருக்கிறார்கள்.

சிங்கள வரிகளை ஆர்.டி.கே மற்றும் மிதிலா எழுதியிருப்பதுடன், ரொஷான் மற்றும் மதுஷங்க ஆகியோர் பாடியுள்ளனர்.

STORY & DIRECTION PIRAGASH RAJAH
MUSIC – POOVAN MATHEESAN
SINGERS – THUSHYANTHAN
CAST – SACHIN, VIDURSHA, NAVAM, JEEN, KATHURSINI
DOP – ARULSELLVAM
EDIT – SELVARAJ THANUSHAN
LYRICIST – K.S SHANTHAKUMAR
MAKEUP – DILO
DIRECTION TEAM – SAJITH, THENA
PRODUCTION – TRM PICTURE CANADA INC