ஞானதாஸின் உரு (TRANCE 2018) குறும்படம்

520

ஸ்கிறிப்நெட்டர் Eternal Icon Film உடன் இணைந்து வழங்கும் ஈழத்தின் மூத்த திரைச்செயற்பாட்டாளர்களில் ஒருவரான ஞானதாஸ் இயக்கிய “உரு” குறும்படம் அண்மையில் யு-ரியூப்பில் வெளியாகி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகின்றது.

ஏறக்குறைய 3 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கிய இக்குறும்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றுள்ளதுடன் பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகளிலும் திரையிடப்பட்டு கலந்தாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போர் காரணமாக தனது மகனைத் தொலைத்த தாய், அவனைத் தேடி அலைவதை கதைக்கருவாகக் கொண்டு இக்குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன மகனைத் தேடியலையும் தாயாக பிரதான பாத்திரத்தில் கலாநிதி ஜெயரஞ்சினி ஞானதாஸ் நடித்துள்ளார். அவர்களுடன் அலோசியஸ் தேவநாயகம், ரவிச்சந்திரன் கேதுஜா மற்றும் ஏராளமான துணை நடிகர்கள் இக்குறும்படத்தில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு சிவ சாந்தகுமார் (பிரித்தானியா), படத்தொகுப்பு சஜீத் ஜெயக்குமார் (பிரித்தானியா), இசை மதீசன் தனபாலசிங்கம், இவர்களுடன் ஏராளமான தொழில்நுட்பக்கலைஞர்களும் இப்படத்தில் பணி புரிந்துள்ளனர்.