டென்மார்க் ஷண் இன் “இரு கில்லாடிகள்” திரைப்படம்

1178

இலங்கையின் மூத்த திரைக்கலைஞரான டென்மார்க் ஷண் இன் இயக்கத்தில் உருவான “இரு கில்லாடிகள்” திரைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் கலைஞர் தொலைக்காட்சியின் “மானாட மயிலாட” நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற பயாஸ் என்கிற கிருஷ், சுவாதி ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்துள்ளதுடன் கனகப்ரியா, அசோக், அலெக்ஸ், செல்வி, கணேஷ், கிரேஸி, விஜய்பாலாஜி ஆகிய புதுமுகங்களும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர் வெண்ணிற ஆடைமூர்த்தி கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.

பி.எஸ்.செல்வத்தின் ஒளிப்பதிவில் இப்படத்தை எழுதி, இசையமைத்து, இயக்கி, தயாரித்துள்ளார் டென்மார்க் ஷண்.