ரஹ்மானின் ‘தும்பி துள்ளல்..’ இளசுகளின் இன்றைய ரிங் டோன்

420

கொரோனா முடக்கத்தால் சினிமா மொத்தமாக ஸ்தம்பித்தால் பொழுதுபோக்கு எதுவுமின்றி ரசிகர்கள் திண்டாடிப்போயுள்ளனர். புதுப்படங்கள், புதுப்பாடல்கள் என்று எதுவுமே வெளிவராத நிலையில் வெறுமையை உணர்ந்த சினிமா ரசிகர்களுக்கு பாலைவனத்தில் பொழிந்த மழைத்துளி போல இசைப்புயலின் ‘தும்பி துள்ளல்’ பாடல் வெளிவந்திருக்கின்றது.

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘சீயான்’ விக்ரம், ஸ்ரீதிதி ஷெட்டி, இர்பான் பதான் நடித்துள்ள ‘கோப்ரா’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். இப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளிவந்து இளசுகளின் மனதைக் கொள்ளையடித்துள்ளது. நகுல், ஸ்ரேயா கோஷல் பாடியுள்ள இப்பாடலை கவிஞர் விவேக் எழுதியுள்ளார்.

தவில், நாதஸ்வரம், புல்லாங்குழல் என பாரம்பரிய இசைக்கருவிகளுடன், நவீன இசையையும் சேர்த்து, மலையாள – தமிழ் கலவையில் அற்புதமாக ஒரு பாடலை தந்துள்ளார் இசைப்புயல். ரஹ்மானின் அண்மைய பல பாடலில்களில் ‘ரஹ்மான் டச்’ மிஸ்ஸாகியதாக பல ரசிகர்களும் தெரிவித்து வந்த நிலையில், அக்மார்க் ரஹ்மான் பாடலாக ‘தும்பி துள்ளல்’ வெளிவந்து இளசுகளின் ‘ரிங் டோன்’ ஆக மாறியிருக்கின்றது.