நம் நாட்டு கலைஞர்களின் ஒன்றிணைவில் நடிகர் விஜய்யின் பிறந்த நாள் பாடல் “அண்ணா”

206

நடிகர் “தளபதி” விஜய்யின் 48 ஆவது பிறந்த தினம் நாளையாகும் (22). இந்நிலையில், அவர் நடிப்பில் உருவாகிவரும் “தளபதி 66” படத்தினுடைய டைட்டில் “வாரிசு” இன்று வெளியிடப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்த தினத்தை ரசிகர்கள் பலவாறு கொண்டாடி மகிழ்கின்றனர்.

இந்நிலையில் இலங்கைக் கலைஞர்கள் சிலரின் ஒன்றிணைவில் “அண்ணா” என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பாடலை தென்னிந்திய சினிமாவில் தடம்பதித்திருக்கும் கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ளார்.

U.K.மாலாகுமார் படைப்பகம் (இலண்டன்) தயாரிப்பில் வெளிவந்துள்ள இந்தப் பாடலுக்கான இசை சிந்துஜன் வெற்றிவேல். கஜீபன் செல்வம் மற்றும் ஸ்ரீநிதி ஆகியோர் இப்பாடலைப் பாடியுள்ளனர்.

கதிர் ராஜசேகரத்தின் படத்தொகுப்பில் உருவான இப்பாடலின் ஸ்ரூடியோ படப்பிடிப்பை ரெஜி செல்வராஜா மேற்கொண்டுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் நம் நாட்டின் மற்றுமொரு கலைஞரான இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் இசையில் வெளிவந்த நடிகர் விஜய்யின் பிறந்த நாள் பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.