’91 ~ 19′ பாடலை வெளியிடப்போகும் திரைப்பிரபலம் யார்? (புகைப்படத்தொகுப்பு)

870

தென்னிந்திய திரைப்பட இயக்குனர் மித்திரன் மற்றும் பிரபல நடிகர்களான சாய் தீனா, ரோபோ சங்கர் ஆகியோரினால் அண்மையில் வெளியிடப்பட்ட ஈழத்தின் ஒரு படைப்பு “91 ~ 19”.

இந்த காணொளிப்பாடல் சுவிஸில் வசிக்கும் செல்வா முகுந்தன் அவர்களினால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதேவேளை இப்பாடலை இசையமைத்து பாடியிருக்கிறார் மலேசியாவில் வசிக்கும் திலீப் வர்மன் அவர்கள்.

கதாநாயகனாக இலங்கையை சேர்ந்த அஜய் என்பவரும் , கதாநாயகியாக டென்மார்க்கில் வசிக்கும் நர்வினி டேரி என்பவரும் நடித்திருந்தார்கள். ஈழத்து திரைப்படமாக உலக அரங்கில் அண்மையில் வெளியாகிய “சினம் கொள்” திரைப்படத்தின் கதாநாயகியும் இவராவார்.

இப்பாடலை இயக்கியிருக்கின்றார் இயக்குனர் சிகிர்தன் கிறிஸ்துராஜா. தென்னிந்தியாவில் சில படைப்புக்களில் உதவி இயக்குனராக பணியாற்றிவிட்டு தற்போது இப்பாடலை இயக்கியிருக்கிற்றார். குறும்படங்கள், காணொளிப்பாடல்கள் என்று இது இவரது எட்டாவது படைப்பாகும்.

இப்பாடலுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கின்றார் ரிஷி செல்வம். கொரியாவில் Asian Film Academy யில் ஒளிப்பதிவாளருக்குரிய பயிற்சியினை நிறைவு செய்தவர்.

இது ஒரு பாடலாக இருக்கும் வேளையிலும் கூட Red Healium Camera வில் தான் படப்பிடிப்பு செய்யப்பட்டது. அதே போல் ஒரு சரியான படப்பிடிப்புத்தளம் எவ்வாறு தேவையான Departments ஐ வைத்து இயங்குமோ அது போல இப்பாடலிலும் அநேகமான Departments உம் சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பை உருவாக்கும் வண்ணம் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இப்பாடலின் முன்னோட்டம் நேற்று முன்தினம் PML MEDIA முகப்புத்தக தளத்தில் வெளியாகி அதிகமாக பேசப்படும் படைப்பாக காணப்படுகிறது.

விரைவில் வெளியாகவிருக்கும் இப்படைப்பை தென்னிந்திய பிரபல நடிகர்கள் யாரேனும் வெளியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

செய்தி – பாடல் குழு