“புத்தி கெட்ட மனிதர் எல்லாம்” திரைப்பட வெளியீட்டு திகதிகள், நேரங்கள் அறிவிப்பு!

590

“பிளக்போர்ட் இன்டர்நேஷனல்“ தயாரிப்பாக ராஜ் சிவராஜின் இயக்கத்தில் பூவன் மதீசனின் இசையில் உள்நாட்டுக் கலைஞர்கள் பலரின் பங்கேற்பில் வெளியாகவுள்ள திரைப்படம் “புத்தி கெட்ட மனிதர் எல்லாம்”. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் வெளியீட்டு திகதிகள் மற்றும் நேரங்களை படக்குழு அறிவித்துள்ளது.

இந்தத் திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டுடன் கூடிய படக்குழுவினரின் ஊடக சந்திப்பு அண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றது. இதில், படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.

”வாழ்க்கையில் இரண்டு மணித்தியாலங்களை எங்களை நம்பி செலவழியுங்கள் உங்களை நாங்கள் நிச்சயம் மகிழ்விப்போம். இத்துறைக்கு வந்து 11 வருடங்களின் பின்னர் எம்மவரை நம்பி முழுநீள திரைப்படம் ஒன்றை எடுத்து உங்கள் முன் வருகிறோம் எங்களுக்கு நீங்கள் முழு ஆதரவையும் தருவீர்கள் என நம்பிகிறோம்” என “புத்திகெட்ட மனிதர் எல்லாம்” என்கிற முழு நீளத் திரைப்படத்தின் இயக்குனர் ராஜ் சிவராஜ் தெரிவித்தார்.

அத்துடன் படத்தில் பணியாற்றியவர்கள் தங்களது அனுபவங்கள் திரைப்படம் தொடர்பான விடயங்களை பகிர்ந்து கொண்டனர்.

“புத்திகெட்ட மனிதர் எல்லாம்” திரைப்படம் டிசம்பர் 24, 25, 26 ஆம் திகதிகளில் யாழில் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://fb.watch/9LUtO079C6/