நட்பென்ற மொழியே… திஷோனின் பிரண்ட்ஷிப் கீதம் ‘தோஸ்துடா’

803

நட்பு போற்றும் பாடல் என்றதும் சட்டென நம் நினைவுக்கு வருவது என்னவோ, ரஹ்மானின் ‘முஸ்தபா..’ பாடல் தான். ஆனால், நம்மவர்களாலும் நட்பைப் பாடல் வடிவில் போற்ற முடியும் என நிரூபித்திருக்கின்றார்கள் இளம் இசையமைப்பாளர் திஷோன் தலைமையிலான ‘தோஸ்துடா’ டீம்.

நீள்கின்ற நிஜமே.. வீழ்கின்ற உறவே – நம்
அன்பென்ற அலையியே குளிரும் சூரியனே!

இதயத்தின் வலியே… நட்பென்ற மொழியே – நாம்
கூடுகின்ற நாளினிலே குறுகும் சோகமே!

எனத்தொடரும் வரிகள் அனைத்தும் நட்பின் ஆழத்தைப் பேசக்கூடியவை. பாடலில் இனிமையைப் போலவே அதைக் காட்சிப் படுத்திய விதமும் அருமையே!

திஷோன் விஜயமோகன் அவர்களின் இசை மற்றும் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்பாடலை Yarl smart water solutions & Shara Engineering, இலங்கேயன் பிக்ஸர்ஸூடன் இணைந்து தயாரித்துள்ளது.

இப்பாடலுக்கான வரிகள் கே.எஸ்.சாந்தகுமார். பாடியவர் சங்கீர்தன். ருகீத், நிருபன், வேணி, திஷோன், டினுஷான் மற்றும் உஷாந் தோன்றி நடித்திருக்கும் இப்பாடலுக்கான ஒளிப்பதிவு ரெஜி செல்வராசா, படத்தொகுப்பு கோபி அலெக்ஸ். நடன இயக்கம் கன்னா உதய்.