அண்மையில் வெளியாகவுள்ள சில நம்மவர் படைப்புக்கள்

427

டிலீப் வர்மன் இசையில் சுகிர்தன் கிருஷ்துராஜா இயக்கத்தில் செல்வா முகுந்தனின் தயாரிப்பு மற்றும் வரிகளில் உருவான “91 – 19” என்ற காணொளிப்பாடலின் ரீசர் நேற்று (05) வெளியிடப்பட்டுள்ளது.

இப்பாடலில் அஜய், நர்வினி டேரி ஆகியோர் நடித்துள்ளதுடன், ஒளிப்பதிவு ரிஷி செல்வம், இணை இயக்கம் தமிழன்டா ஆகாஷ், உதவி இயக்கம் நிலவன் தமிழன்.

’91-19′ பாடலிலின் ரீசரை இந்த இணைப்பினூடு பார்வையிடலாம்.

பூர்விகா நடிப்பில் உருவான “தேன்காரி” பாடலினதும், “உயிர்” குறும்படத்தினதும் ரீசர் இன்று (06) வெளியிடப்படவுள்ளதாக நடிகை பூர்விகா தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பரதன் – பூர்விகா நடிப்பில் உருவாகியுள்ள இப்பாடலுக்கான இசை, வரிகள் மற்றும் குரல் சிவி லக்ஸ், ஒலிக்கலவை ஷமீல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் டிசைன் ஷரத் (ஸ்ரூடியோ லைக்)

இதேவேளை, S S மீடியா தயாரிப்பில் சசிகுமார் ரட்ணம் வழங்கும் “தலைமை” குறும்படத்தின் ரீசன் எதிர்வரும் 10 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. இதன் கதை, திரைக்கதை, வசனங்கள் ஆகியவற்றை சசிகுமாரே எழுதி இருப்பதுடன் இப்படத்தை இயக்கியுள்ளார் லீ.

ஜொனி, பிரியா, இதயராஜ், வஷ்மியா, பிராந்தன், தினுஜா மற்றும் குழந்தை நட்சத்திரமாக ஜனத் ஆகியோர் நடித்துள்ள இக்குறும்படத்திற்கான ஒளிப்பதிவு பிரியன் அருள், படத்தொகுப்பு கெமல், இசை மற்றும் சிறப்பு சப்தம் பகீர் மோகன், கலை இயக்கம் கலாமோகன், ஒப்பனை அன்ட்ரூ ஜூலியஸ்.