கர்ணன் படைப்பகம் நடாத்தும் பாடல் மற்றும் தனி நடிப்பு போட்டி

365

கர்ணன் படைப்பகம் (Karnan Creations) வெற்றிகரமாக நடாத்திய குறும்படப்போட்டியைத் தொடர்ந்து எம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பாடல் மற்றும் தனி நடிப்பு போட்டியை நடாத்துகின்றது.

நிபந்தனைகள்

👉இலங்கையின் எப்பாகத்தில் இருந்தும் 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்குபெறலாம்.
👉பின்னணி இசை இல்லாது (without karoke or any music) உங்கள் காணொளிகளை அனுப்பி வைக்க வேண்டும்.
👉பாடல் 03 நிமிடங்களுக்கு மேற்படலாகாது.
👉தனி நடிப்பு 05 நிமிடங்களுக்கு மேற்படலாகாது.
👉காணொளிகள் அனைத்தும் கர்ணன் படைப்பகம் பேஸ்புக் மற்றும் யு-ரியூப் பக்கத்தில் தரவேற்றப்படும்.
👉புள்ளியிடலில் காணொளிகள் பெற்ற பார்வைகளும் (Views-50%) கவனத்தில் கொள்ளப்படும்.
👉முதற்கட்டத் தேர்வுகளின் முடிவில் பாடல் மற்றும் தனி நடிப்பு பிரிவுகளில் தலா 10 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்காக தெரிவு செய்யப்படுவார்கள்.
👉இறுதிப்போட்டி குறித்து ஒதுக்கப்பட்ட ஒரு இடத்தில் நேரடி நிகழ்வாக துறை சார் நடுவர்கள் முன்னிலையில் இடம்பெறும்.
👉நடுவர்களின் முடிவே இறுதியானது.
*இந்தப் போட்டியில் பங்கேற்க கட்டணங்கள் எதுவும் செலுத்தத்தேவையில்லை.

👉இறுதிப்போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
👉முதல் 03 இடங்களையும் பெறும் போட்டியாளர்களுக்கு வெற்றிக்கேடயம், சான்றிதழ் மற்றும் பணப்பரிசில் வழங்கப்படும்.
👉பாடல் போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு கர்ணன் படைப்பகம் தயாரிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் பாடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும்.
👉நடிப்பு போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கும் கர்ணன் படைப்பகம் தயாரிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும்.

உங்கள் காணொளிகளை அனுப்ப வேண்டிய
வட்ஸ் அப் இலக்கம் (Whats app) : +94 775951134
அல்லது
மின்னஞ்சல் முகவரி E-mail : karnancreations@gmail.com

உங்கள் காணொளிகள் வந்து சேர வேண்டிய இறுதித்திகதி 31.10.2023