சி.வி.லக்ஸ் இன் இசை மற்றும் இயக்கத்தில் “ஜெப்னா பொண்ணு ஹட்டன் பையன்” பாடல்

672

ராப் இசைக்கலைஞர், இசையமைப்பாளர் சி.வி.லக்ஸ் இன் புதிய வெளியீடாக வந்திருக்கும் பாடல் “ஜெப்னா பொண்ணு ஹட்டன் பையன்”. இந்தக் காணொளிப் பாடலின் கூடுதல் சிறப்பு இதனை சி.வி.லக்ஸே இயக்கியுள்ளார் என்பது தான்.

சி.வி. இன் வரிகளுக்கு சி.வி.லக்ஸ் மற்றும் அருண், ஐஸ்வர்யா ஆகியோர் குரல் கொடுத்துள்ளார்கள். பாடலில் ஆக்கோ ரணில், லக்ஸி மற்றும் குட்டி நிரோ ஆகியோர் நடித்துள்ளார்கள்.

காணொளிப்பாடலுக்கான ஒளிப்பதிவு கே.எஸ்.பவன் கந்தையா, படத்தொகுப்பு மற்றும் போஸ்டர் டிசைன்ஸ் ஸ்ரூடியோ லைக் சரத்குமார். ஒலிக்கலவை தினேஷ் நா. தயாரிப்பு தேனுஷன் கருணாகரன்.

மலையகத்தைச் சுற்றுப்பார்க்கச் சென்ற ஜெப்னா பொண்ணும் அங்கு வேலை பார்க்கும் ஹட்டன் பையனுக்குமிடையிலான “கண்டதும் காதலை” கான்செப்டாக வைத்து காட்சியாக்கியிருக்கின்றார்கள். கூடவே சி.வி.யும் அருணும் ராப் வரிகளுடன் தோன்றுகின்றார்கள்.

இந்தப் பாடலில் வடக்கு, கிழக்கு, மலையகம் என படைப்பு ஒன்றின் மூலம் கலைஞர்கள் சங்கமித்திருப்பது இன்னொரு சிறப்பு.

Composed and Directed by : Cv Laksh
Featured Artists – Aishwarya and APA.Arun
Beat Produced by – Isatorresbeats
Lyrics – Cv laksh
Cinematography: KS Bawan Kandiah
Editing and Posters – Studiolike Sharath Kumar
Assistant Director- Dilushan Walker
Production – Shan Dream Production – Thenushan Karunaharan
Mixed and Mastered by – Thinesh Na
Cast- Aakko Ranil Laksi Lux Kutty Niro