நாளை திரைக்கு வருகின்றது “ஒற்றைச்சிறகு” – எம் கலைஞர்களை ஊக்குவிப்போம் வாரீர்!

445

ஜனா மொகேந்திரன் இயக்கத்தில் கிழக்கிலங்கையின் வெருகல் பகுதியில் முதன் முதலில் தமிழில் உருவான “ஒற்றைச் சிறகு” திரைப்படம் நாளை (14) திருகோணமலை நெல்சன் திரையரங்கில் திரையிடப்படுகின்றது.

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு கலைஞர்களின் பல மாத உழைப்பில் உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு அண்மையில் “யு” சான்றிதழ் கிடைத்திருந்தது. இந்நிலையில், நாளை 04 காட்சிகளாக இத்திரைப்படம் திரையிடப்படுகின்றது.

பெண்ணியத்தை மையப்படுத்திய இப்படத்தில் பிரதான பாத்திரம் உட்பட நடிகையர்களாகவும், தொழில்நுட்பக் கலைஞர்களாகவும் பல பெண்கள் பணிபுரிந்துள்ளமை சிறப்பம்சமாகும்.

வாய்ப்புள்ளவர்கள் அனைவரும் நாளை இத்திரைப்படத்தை நேரில் சென்று பார்த்து, எம் கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். இப்படத்தின் ஊடக பங்காளர்களாக நாமும் (குவியம்) இருப்பதையிட்டு பெரு மகிழ்வு அடைகின்றோம்.

“ஒற்றைச்சிறகு” படம் குறித்தும் அதன் இயக்குனர் குறித்தும் அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்புக்களை சொடுக்குங்கள்.

‘ஒழுங்கான களம் எமக்கில்லை’ – ‘ஒற்றைச்சிறகு’ இயக்குனர் ஜனா மோகேந்திரன் ஆதங்கம்

அன்பு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீட் வெளியிட்டு வைத்த “ஒற்றைச்சிறகு” முதற்பார்வை

மார்ச் 14 இல் திரைக்கு வருகின்றது “ஒற்றைச்சிறகு” திரைப்படம்