மார்ச் 14 இல் திரைக்கு வருகின்றது “ஒற்றைச்சிறகு” திரைப்படம்

770

கந்தையா இராசநாயகம், கந்தையா கோணேஷ்வரன் ஆகியோரின் Rohad films  தயாரிப்பில் MP HEROES Pictures இன் வெளியீடாக திரைக்கு வருகின்றது “ஒற்றைச்சிறகு” திரைப்படம்.

பெண்ணியம் சார் கதைக்களத்துடன் 45 நிமிடத்தை கொண்ட Pilot film வகையில் வெருகலில் படமாகிய இத்திரைப்படத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்ட கலைஞர்கள் ஒன்றிணைந்து 6 மாத கடுமையான உழைப்பில் தயாரித்துள்ளனர்.

இத்திரைப்படம் ஜனா மோகேந்திரன் இயக்கத்தில் அகல்யா டேவிட் / Janarj ஒளிப்பதிவில் கிஷாந்த் இசையில் அபிஷேக்கின் படத்தொகுப்பில் வெளிவருகின்றது.

இதில், விதுஷா / கிருபா / அகல்யா டேவிட் / குஜேந்தன் / Janarj / Baby யுதிஷ்டன் / தவமுரளி / திலக் / சந்துரு / கேனு / உதய் / நந்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் பூர்விகா இராசசிங்கம் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு தவமுரளி Production head ஆக பணியாற்றுகிறார். உதவி இயக்கம் குஜேந்தன் / சந்துரு செய்துள்ளனர். ஒப்பனை கிருபா / தக்ஷி மேற்கொள்ள ஒலிக்கலவை Thinesh Na செய்துள்ளார். ஒலிப்பதிவு “அ” கலையகம் Grason Prashanth மேற்கொண்டுள்ளார்,

சமகால பெண்ணியம் சார் பிரச்சினைகளை மையப்படுத்தி உருவம் பெற்றுள்ள இத்திரைப்படம் பெண்கள் மத்தியில் மட்டுமல்ல இளைஞர்கள் மத்தியில் பாரிய வரவேற்பை பெறும் என்பதில் படக்குழுவினர் உறுதியாக உள்ளனர்.

எதிர்வரும் மார்ச் 14 ஆம் திகதி திருகோணமலை நெல்சன் – Nelson திரையரங்கில் இப்படம் திரையிடப்படவுள்ளதுடன் இத்திரைப்படத்தின் Teaser மகளீர் தின வெளியீடக மார்ச் 7 இல் வெளியிடப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

பெண்களை மையப்படுத்திய இதில் அதிகளவில் பெண் கலைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டமை விசேட அம்சமாகும். குறிப்பாக பெண் ஒளிப்பதிவாளர், பெண் ஒப்பனை கலைஞர், பெண் பாடலாசிரியர் என பலருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதுடன் கதாநாயகிக்கு முக்கிய முன்னுரிமை வழங்கப்பட்டு கதை அமைக்கப்பட்டுள்ளது.

வெருகலில் இருந்து வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்பதாலும், திருகோணமலையில் திரையிடப்படும் மிகச்சொற்பமான எமது படைப்புக்களில் “ஒற்றைச்சிறகு”ம் ஒன்று என்பதனாலும் மக்களது பாரிய ஆதரவை படக்குழுவினர் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை இப்படக்குழுவை ஆதரித்து பாராட்டி விளம்பரப்படுத்தும் “குவியம்” இணையம் இதன் ஊடகப் பங்காளராகவும் இணைந்துள்ளது என்பதை பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் அறிவிக்கின்றோம்.

எம் கலைஞர்களை நாமே ஊக்குவிக்க வேண்டும். “நமக்கோர் களம் நாமேயியற்றுவோம்”