காதல் கணக்கு பண்ணும் நெலுவின் ‘லவ் குலேட்டர் பாடல்’

1002

இந்த வருடம் மே மாதம் எம்மவர்களை பொறுத்தவரையில் ஒரு அட்டகாசமான மாதம் போலும்! அடுத்தடுத்து பாடல்கள், குறும்படங்கள் என வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அரசாங்கம் விதித்திருக்கும் பயணக்கட்டுப்பாட்டை வீட்டில் இருந்து தமது post production பணிகளை முடிப்பதற்காக செலவிட்டு தமது படைப்புக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள் எம் சினிமா கலைஞர்கள்.

அந்த வகையில் நடிகர், இயக்குனர் ஆர்.ஜே. நெலுவின் இயக்கத்தில் ஜொனாவின் இசையில் உருவான ‘லவ் குலேட்டர்’ பாடல் கடந்த 21 ஆம் திகதி வெளியாகியுள்ளது.

ஹேரத் கதிரின் வரிகளில் உருவான இந்தப் பாடலை பகீர் மோகன் பாடியுள்ளார். பாடலுக்கான ஒளிப்பதிவு தேவா ரஜீபன். படத்தொகுப்பு ஆர்.ஜே.நெலு.

இந்தக் காணொளிப்பாடலில் நெலுவுடன் ப்ரஷா மகாராஜன், தினு, ஜெனிதன், திக்‌ஷனன், ஆர்.எபி, பவிதன், இம்ரான் ஆகியோர் நடித்துள்ளார்கள். சி.கே.அனுஷாந்தின் நடன இயக்கத்தில் இளமை ததும்பும் வகையில் அட்டகாசமாக பாடல் படமாக்கப்பட்டுள்ளது.