அருள் செல்வம் இயக்கத்தில் ஸ்ரீவிஜய் ராகவன் இசையில் ‘ஆலங்குருவியே’ பாடல்

1721

EAGLE Studio சார்பில் மைக்கேல் காந்தகரன் தயாரிப்பில் அருள்செல்வத்தின் திரைக்கதை, வசனம், படத்தொகுப்பு மற்றும் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்துள்ள பாடல் “ஆலங்குருவியே”.

இந்தப்பாடலுக்கான வரிகளை எழுதி இசையமைத்துள்ளார் ஸ்ரீவிஜய் ராகவன். பிரபாகரன் சங்கீர்த்தன் பாடியுள்ளார். சாயிதர்சன் இசைக்கலவையை மேற்கொண்டுள்ளார்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள “ஆலங்குருவியே“ பாடலுக்கான ஒளிப்பதிவை தருண் பாஸ்கருடன் இணைந்து அருள்செல்வம் மேற்கொண்டுள்ளார். ட்ரோன் காட்சிகளை வனிஷா ஷெர்லி கவனித்துள்ளதுடன் உதவி இயக்குனராகவும் தயாரிப்பு முகாமையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ஒப்பனைக் கலைஞராக லஜந்தா குணா பணியாற்றியிருப்பதுடன் ஆடை ஒழுங்கமைப்பை நகுலா பாஸ்கர் கவனித்துள்ளார். கலை இயக்கத்தை வனிஷா ஷெர்லியுடன் இநை்து துவா பாஸ்கர் மேற்கொண்டுள்ளார்.

குணாளன், லஜந்தா குணா, ஷொபிஷாந்த், தருண் பாஸ்கர், கிரிஸ்டினா க்ரேஸ், மதிமிஷா, கம்சிகா, நிம்ஷிகா, மதுமிஷா, தக்ஷனா, துவா பாஸ்கர், நகுலா பாஸ்கர் மற்றும் சரஸ்வதி ஆகியோர் பாடலில் நடித்துள்ளனர்.

அருள் செல்வம் பாடல்களுக்கே உரித்தான “டச்” இந்தப்பாடலிலும் தெரிகின்றது. ஒரு கதையோட்டத்துடன் ஆரம்பிக்கும் பாடல் அப்படியே அழகான ஒரு காதலைச் சொல்லிப் போகிறது.

ஒளிப்பதிவு பாராட்டத்தக்கது. காட்சிக்கவ்வல்களில் ட்ரோனுடன் போட்டி போட்டிருக்கிறார்கள். சங்கீர்த்தனின் வருடும் குரலும், ஸ்ரீவிஜய் இன் இசையும் அழகு. ஜதார்த்தமான நடிப்பைத் தருகின்ற பிரதான நடிகர்களுடன் அருமையான பாடலைத் தந்திருக்கின்றார் அருள் செல்வம்.

Screenplay, Dialogue, Edit & Direction – Arulsellvam
Music & Lyrics – Srivijay Ragavan
Vocals – Prabakaran Shangeerththan
Backing Vocals – Srivijay Ragavan
Cinematography – Arulsellvam & Darun Basgar
Makeup : Lajantha Kuna
Costume : Nagula Basgar
Art By : Vanisha Sherly & Duva Basgar
Production Manager : Vanisha Sherly
Drone & Assistant Director : Vanisha Sherly
Design & Promos By Vaash Network
Mixing & Mastering – Sayeetharsan
Produced by – Michael Kanthakaran
Production – Eagle Studio
Typography – Rajeevan Thayaparan
Composed & Arranged by Srivijay Ragavan
Keys – Sagishna Xavier
Live Percussions – Sharath
Flute – Nataraaj
Artist – Kunalan | Lajantha Kuna | S.Shobishanth | Darun Basgar | Christina Grace | Mathymisha | Kamsika | Nimshika | L.Mathumisha | L.Thakshana | Duva Basgar | Nagula Basgar | Saraswathi