காதல் ஞாபகங்கள் தாலாட்டும் நிரோஷின் “ஒரு கோடி பூக்கள்” பாடல்

467

நிரோஷ் விஜய்யின் தயாரிப்பு மற்றும் ஒருங்கமைப்பில் உருவாகியிருக்கும் பாடல் “ஒரு கோடி பூக்கள்”.

இந்தப் பாடலுக்கான வரிகளை ராகுல் ராஜ் எழுதியிருக்கின்றார். பாடலுக்கான இசை மற்றும் ஒலிக்கலவை நிஷான் பெர்ணான்டோ. பாடலைப் பாடியுள்ளார் நிரோஷ் விஜய்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இந்தப் பாடலை ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கின்றார் “இலங்கேயன் பிக்சர்ஸ்” ரெஜி செல்வராஜா. பாடலின் படத்தொகுப்பாளரும் அவர் தான்.

Real couple ஆன நிரோஷ் விஜய், மற்றும் நிலானி நிரோஷ் ஆகியோர் பாடலில் தோன்றி நடித்துள்ளனர்.

காதலன் – காதலி அல்லது கணவன் – மனைவி, பிரிவைத் தத்ரூபமாகச் சொல்லும் இந்தப் பாடலை, அதன் அழகு கெடாமல் காட்சிப்படுத்தி இருக்கின்றார் இயக்குனர். அவள் ஞாபகங்கள் நினைவுகளாக வந்து போகும் காட்சிகள் உட்பட ஒளிப்பதிவில் அசத்தியிருக்கின்றார் ரெஜி.

Produced by Nirosh Vijay
Composer & Vocal: Nirosh Vijay
Lyrics: Rahul Raj
Music & Mixed: Nishan Fernando
Mastered: Deyo
Guitarist: Kapila Kosala
Violinist: Prabath Jayasooriya