அசத்தும் “அம்புலு” ட்ரெயிலர் – படத்துக்கு வீ ஆர் வெய்டிங்..

1029

AR Production தயாரிப்பில் சுதர்சன் ரட்ணம் இயக்கத்தில் உருவாகியுள்ள “அம்புலு” திரைப்படத்தின் ட்ரெயிலர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரெயிலரே மிரட்டுகின்றதே.. படத்தைப் பார்ப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டுகின்றது. எம்மவர்களாலும் பிரமாதங்களைப் படைக்க முடியும் என ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறது “அம்புலு” ட்ரெயிலர். விரைவில் ஒரு அக்ஷன் சரவெடி காத்திருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

படத்தில் Rekshan vicky, Priyatharsini, Sutharsan Ratnam, livington, Vinsan, Anu sathyaseelan, Suvikaran, Kiri Ratnam, Poorvika, Remonisha, Victor, Ithayaraj, Prashodhayath, Sarmilan, Jinu, gresiyan, Rwin prasth, Karthik siva, Shasha Serrin என ஒரு பெரிய பட்டாளமே நடித்திருக்கின்றது.

இத்திரைப்படத்திற்கான ஒளிப்பதிவு அஜீபன் ராஜ். படத்தொகுப்பு இளங்கோ சிறில், இசை ரிவின் பிரசாத், கலை இயக்கம் ஆர்.யு.வின்சன், சண்டைப் பயிற்சி கார்த்திக் சிவா மற்றும் நீதன், நடன இயக்கம் கண்ணா உதய்.

“அம்புலு” ட்ரெயிலர் அண்மையில் வெளிவந்த விஜய்யின் “மாஸ்டர்” திரைப்படத்துடன் யாழ். திரையரங்குகளில் காண்பிக்கப்பட்டதாக செய்தி வெளிவந்திருந்தது. தற்சமயம் அது யு-ரியூப்பிலும் வெளிவந்து பலத்த வரவேற்பைப் பெற்று வருகின்றது. விரைவில் வெள்ளித்திரையில் படத்தை பார்க்க வீ ஆர் வெய்டிங்…