டிலீப் வர்மன் இசையில் “ஒரு நாளின் கனவுகள்” காணொளி பாடலின் டீசர் வெளியீடு

275

தயாரிப்பாளர் ரவிபிரதீப் கிருஷ்ணநிதி அவர்களின் “SHAN DIGITAL STUDIO” உடைய தயாரிப்பில் அவரின் 10 ஆவது படைப்பாக மிக விரைவில் வெளிவர இருக்கும் பாடல் ”ஒரு நாளின் கனவுகள்“. இதன் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

பிரபல பாடகர் மற்றும் இசை அமைப்பாளர் “Dr. திலீப்வர்மன்” அவர்களின் இசை மற்றும் குரலில் உருவான இந்தப்பாடலை காணொளிப்பாடலாக சுகிர்தன் கிறிஸ்துராஜா இயக்குகின்றார்.

பாடலில் மிருணன் மற்றும் சௌதமினி சாந்தகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். பாடலுக்கான ஒளிப்பதிவினை அலெக்ஸ் கோபியும் படத்தொகுப்பினை நிவேதிகனும் செய்துள்ளனர். கலை இயக்கம் பிரதாப், ஒப்பனை Vt அனுஷா. டிசைன்ஸ் நிலான்.

விரைவில் வெளியாகவுள்ள “ஒரு நாளின் கனவுகள்” பாடல் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.