கிராமிய மணத்துடன் அன்புமயிலின் இயக்கத்தில் “ஜிமிக்கி” பாடல்

524

ராஜஸ்டோன் ப்ரொடக்ஷன் சார்பில் கே.லோககாந்தன் தயாரிப்பில் ரி.அன்புமயிலின் இயக்கத்தில் வெளிவந்துள்ள பாடல் “ஜிமிக்கி”.

இந்தப்பாடலுக்கான இசையை சி.சுதர்சன் அமைத்துள்ளதுடன், பாடல் வரிகளை ராஜேந்திர குமார் எழுதியுள்ளார். பாடலை ஜூபேஸ் மற்றும் சுதர்சன் ஆகியோர் அழகாகப்பாடியுள்ளார்

ஜிமிக்கி பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை கே.லோககாந்தன் கவனித்துள்ளார். சுவீகரன், கீது சிவா மற்றும் பரதன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப்பாடல் சில வருடங்களுக்கு முன்னர் லோககாந்தன் இயக்கத்தில் வெளிவந்திருந்ததுடன், தற்போது அதனை re create செய்திருக்கிறார்கள்.

பாடலின் காட்சிப்படுத்தல் அழகு. வயலும் அதனுடன் இணைந்த இயற்கையும் ஆங்காங்கே வந்து போகும் கிராபிக்ஸ் காட்சிகளும் அசத்தல். கிராமிய மண் வாசனையுடன் நாயகன் – நாயகியின் காதலும் அட்டகாசம். நிறைவான ஒரு நடிப்பை இருவரும் தந்திருக்கின்றார்கள்.