நொடிக்கு நொடி விறுவிறுப்பு – சுவாரஸ்யமான கதை களத்துடன் கதிரின் “பிளிங்க்” குறும்படம்

1218

அவுஸ்ரேலியா – இந்தியாவைத் தளமாக கொண்டு இயங்கும் GUM LEAF ENTERTAINMENT தயாரிப்பில், இயக்குனர் கதிர் இயக்கத்தில் அண்மையில் வெளியாகிய குறும்படம் “பிளிங்க்”.

நொடிக்கு நொடி விறுவிறுப்பாக சுவாரஸ்யமான கதைக்களத்துடன் வெளியிடப்பட்டுள்ள இப்படமானது அருண் குமாரசாமியின் தனித்துவமான இசையமைப்பில் மிக நேர்த்தியாக தயாரிக்கப்பட்டுள்ளது.

சுமதி குமாரசாமியின் வழிகாட்டுதலின் கீழ் “கம் லீஃப் என்டர்டெயின்மென்ட்” தயாரித்த “பிளிங்க்” குறும்படத்தின் முதன்மைக் காட்சி மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தரங்கனி திரையரங்கில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கலந்துகொண்டு தனது பாராட்டுக்களை படக்குழுவினருக்கு வழங்கினார்.

முதற் காட்சியினைத் தொடர்ந்து, GUM LEAF ENTERTAINMENT யூடியூப் சேனலில் “பிளிங்க்” குறும்படம் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

கதிர் இயக்கிய, “பிளிங்க்” அவரது கதை சொல்லும் திறமையைக் காட்டுகிறது. ஒளிப்பதிவு படத்தொகுப்புடன் இயக்கமும் சேர்ந்து கொள்ள கதிர் அதகளம் பண்ணியிருக்கின்றார்.

அருண் குமாரசாமியின் இசைப் பங்களிப்பு “பிளிங்க்”கின் ஆழத்தையும், உணர்ச்சியையும் மக்களிடத்தில் சேர்க்கிறது. இசை அமைப்பாளராக, மற்றும் மாஸ்டரிங் கலைஞராக அவரது இசையமைப்புகள், ஒட்டுமொத்த பார்வை அனுபவத்தை மேம்படுத்துகின்றதோடு கதைக்களத்தை முழுமையாக்குகின்றன மற்றும் வலுவான உணர்ச்சிகரமான பதில்களைத் தூண்டுகின்றன.

பிரதான பாத்திரமேற்று நடித்த திஷான் ஆனந்த், இதயராஜ் மற்றும் கலைஞர்களின் நடிப்பும் அபாரம். ஒப்பனை, கலை மற்றும் அக்ஷன் காட்சிகள் கச்சிதம்.

“பிளிங்க்” இலங்கை தமிழ் திரையுலகின் படைப்புத் திறனைக் குறிக்கிறதோடு அதன் வெளியீட்டின் மூலம், இது சுயாதீன சினிமாவில் கூடுதலாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது, அதன் தனித்துவமான கதைசொல்லல் மூலம் பார்வையாளர்களை கவர்கிறது.

“பிளிங்க்” தொடர்ந்து அதன் அடையாளத்தை உருவாக்கி வருவதால், இந்த குறிப்பிடத்தக்க குறும்படத்தின் பின்னால் உள்ள திறமையான குழுவினரின் அடுத்த படைப்பை பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது. வாழ்த்துக்கள் படக்குழுவினருக்கு..