குவியம் விருதுகள் 2023 – அறிவிப்பு இல. 02

528

குவியம் மீடியா பெருமையுடன் நடாத்தும் “குவியம் விருதுகள் 2023“ இற்கான விண்ணப்பப்படிவங்கள் கோரப்பட்டுள்ள நிலையில், மேலும் சில தெளிவுபடுத்தல்களை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

அதற்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பும் முறை மற்றும் நிபந்தனைகளை அறிந்து கொள்ள அறிவிப்பு இல. 01 ஐ கிளிக் செய்யவும்.

எந்தெந்த பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படவுள்ளன? என்பது பற்றி அநேகமானவர்களிடம் இருந்து கேள்விகள் வருகின்றன. கடந்த வருடம் சிறப்பு விருதுகள் உள்ளடங்களாக 45 விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. இம்முறையும் ஏறக்குறைய அதேயளவான பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

எனவே, நீங்கள் அனுப்பும் படைப்புக்கள் அனைத்தும் அந்தந்த பிரிவுகளின் கீழ் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.

அதுமட்டுமல்லாது போஸ்டர் டிசைனிங்கிற்கு (Graphic Designing) விருது இருக்கின்றதா? அதற்கு எவ்வாறு அனுப்ப வேண்டும்? என்ற கேள்வியும் வந்திருந்தது. நாங்கள் ஏற்கனவே அறிவித்திருந்த கூகுள் விண்ணப்பப்படிவத்தில் அதற்கான இடம் இல்லாத காரணத்தினால் படைப்பாளிகள் தங்கள் போஸ்டர் வடிவமைப்புக்களை எமது மின்னஞ்சல் முகவரியான kuviyam.lk@gmail.com இற்கு அனுப்பி வைக்க முடியும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

நடுவர் குழாம் பற்றிய அறிவிப்புடன் விரைவில் உங்களை சந்திக்கின்றோம்.

மறக்க வேண்டாம்! விண்ணப்ப முடிவுத்திகதி 30.06.2023