நிரஞ்ஜனி நடிப்பில் மிரட்டும் “எந்தன் பொன் வண்ணமே” டீசர்

213

“சரியா தானே சொன்னே” தயாரிப்பாக திவி ராஜ் இன் எழுத்து மற்றும் இயக்கத்தில் இலங்கையின் முன்னணி கலைஞர்கள் பலரின் பங்கேற்புடன் உருவாகிவரும் திரைப்படத்தின் ‘டைட்டில் லுக்’ அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

‘எந்தன் பொன் வண்ணமே’ எனப்பெயரிடப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய டீசர் அமர்க்களமாக வெளிவந்துள்ளது.

இலங்கையின் முன்னணி நடிகை நிரஞ்ஜனி சண்முகராஜா பிரதான பாத்திரமேற்று நடிக்க திவ்யா பத்மினி, திவி ராஜ், ஜனா ரவி, கிரிஷான் ஹரி, கிரிதிஹாஷினி சுதர்ஷிகா, சந்திரஹாசன், ஷாமலா நிரஞ்ஜன், பிரியா ரெனோலா, அஷானி, ஷிரோன், அகிலேஷ், ஷூம்ரி ஆகியோர் இதில் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவை வினோ த்ரோன் மேற்கொண்டிருப்பதுடன் படத்தொகுப்பு பணிகளை திவி ராஜ் கவனித்துள்ளார். கஜன் எஸ். கலையமுதன் இசையமைத்துள்ளார்.

கலை இயக்குனர்களாக கிரிஷான் ஹரி, மதுஷான் ஆகியோரும், உதவி இயக்குனர்களாக திவ்யா பத்மினி, ஷெஹானி ஆகியோரும் பணியாற்றியுள்ளனர். ஒப்பனை மற்றும் ஆடை வடிவமைப்பு திவ்யா பத்மினி, உதவி ஒளிப்பதிவு கவிநாத் சீதா, லைன் மேனேஜர் நிரோஷன்.

வித்தியாசமான கதைக்களத்துடன் மிரட்டலாக வெளிவந்துள்ள “எந்தன் பொன் வண்ணமே” பட டீசரில் நிரஞ்ஜனியின் நடிப்பு மிரட்டலாக இருப்பதாக பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இரண்டு வருட கடின உழைப்பில் வெளிவரவுள்ள இத்திரைப்படக்குழுவினருக்கு எமது வாழ்த்துக்கள்.

Written & Directed – Thivy Raj
DOP – Vino Throne
Music – Gajan S Kalaiamuthan
Asst Dop – Kavinath seetha
Dialogue – Thivy raj
Asst Directors – Divya Pathmini – Shehani
Cast – Niranjani Shanmugaraja – Divya Pathmini – Thivy Raj – Jana ravi – Krishan Hari –
Krithihaashini Sudharshika – Chandra Hasan – Shamala Niranjan – priya Renola – Ashani- Shiron – Akilesh -Zumri
Editing & Poster Design- Thivy Raj
Social media Partners- Nadi – CMB TALKS
Makeup & Coustume -Divya Pathmini
Art Director – Krishan Hari – Madhushan
Line Manager – Niroshan