காரை சிவநேசனின் “புஷ்பக27“ விமர்சனம்

286

இராவணா விஷன் தயாரிப்பில் காரை சிவநேசன் இயக்கத்தில் அண்மையில் திரையரங்க வெளியீடாக வந்த திரைப்படம் “புஸ்பக 27“.

சத்யா மெண்டிஸ் அவர்களால் எழுதப்பட்ட திரைக்கதையை காரை சிவநேசன் இயக்கியிருந்தார். கதையாசிரியரும் இயக்குநரும் படத்திலும் நடித்திருந்தார்கள்.

பாரம்பரிய ஆவணம் ஒன்றை பாதுகாக்க விஞ்ஞானிகள் குழு ஒன்றின் உச்சகட்ட முயற்சியும் எதிர்பார வீழ்ச்சிகளும் கருவாக கொண்டு உருவாகப்பட்டதே புஸ்பக27.

இராவண தேசத்தில் அழியக்கூடாத ஆவணம் ஒன்றை வேற்று கிரகத்தில் இருந்து கொண்டுவரும் விண்வெளி ஆய்வு செய்த விஞ்ஞானிகள் இன்னொரு அறிவுபூர்வமான அணியால் பாதிக்கப்படுகின்றனர்.

இறுதியில் இவர்களின் புஸ்பக 27 விண்கலமும் வானில் ஏவுகணை ஒன்றால் வெடிக்கிறது. அதில் இருந்து ஆவணம் இந்து சமுத்திரத்தில் வீழ்கிறது. இதுதான் கதை. பாகம் 2 வந்தால் முழுக்கதையும் புரியலாம்.

படைப்பு பிரமாண்டமாக இருக்கிறது. அதற்கு ஒலிவிளைவுகளும், அங்கு பயன்படுத்தப்பட்ட vfx உம் தான் காரணமாக இருக்கிறது. இவை பார்ப்பவர்களை ஈர்த்த விடயமாக இருப்பதால் கதை மீதான தேடலை தவிர்த்து விட்டது.

இங்கு பிக்கப், பஜிரோ ஓடும் விதமும் நிறுத்தும் நிலையும் படத்தை விறுவிறுப்பாக்கி விடுகிறது. அவைதான் விறுவிறுப்பாக படத்தை காட்டுகிறது. சதிகார கும்பலினால் தான் இந்த விறுவிறுப்பு கூட்டியிருக்க வேண்டும்

திரைக்கதைக்காக படம் பார்க்க வருவோர் சிலர் தான் கதையினை தேடி இருப்பார்கள்.

இராவண தேசத்தில் சதிவலைகள் பல நடந்தன. அவை சகோதர சதிவலைகள் தான். இங்கு யார் அந்த சதிகாரர். எதிரிகள் அயலவந்தான். அதனால் இந்த படைப்பை எந்த வரலாற்றாறோடும் ஒட்டவும் முடியவில்லை. வரலாற்று தொடர்ச்சி அதன் கதை கரு சார்ந்தோ இந்த படைப்பு இல்லை.

இந்த படைப்பு சினிமாவிற்காக பொழுது போக்கிற்காக உருவாக்கப்பட்ட படைப்பாக இருக்கிறது. இந்த படைப்பு vfx மற்றும் ஒலிவிளைவின் பயன்பாடு, இசை போன்றவற்றால் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.

காதல், விறுவிறுப்பு, அதிரடி, சண்டை என எல்லாம் உள்ள ஒரு படைப்பு. காதல் காட்சியில் வந்தவர்கள் அதனை சிறப்பாக செய்திருந்தனர். அதே போல் பாத்திரங்களை ஏற்றவர்களும் அந்த அந்த பாத்திரங்களை சிறப்பாக வெளிக்காட்டியிருந்தார்கள்.

விஞ்ஞானிகள் இருவரும் சிறந்த பாத்திர உருவாக்கம், அதே போல் புலம் பெயர் தேசத்தில் இருந்து வந்த புலனாய்வாலார்கள், சதிகாரர்கள் என எல்லோரும் அசத்தியிருந்தார்கள்.

இந்த படைப்பு கதையோடு ஒட்டாமல் கிராபிக்ஸ் காட்சி ஆக்கத்தினூடு பயணிப்பதால் சில இடங்களில் அலுப்பு தட்டுகிறது.

இயக்குநர் பாத்திரங்களை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம் போல் தெரிகிறது. 10 வருட உழைப்பிற்கு இந்த படைப்பின் வெளிப்பாடு இன்னும் அதிகாமாக்கியிருக்கலாம். பார்வையாளர்களின் சிந்தனைக்கே மிகுதியை விட்டுவிட்டார்கள் இயக்குநரும் கதையாசிரியரும்..

புஷ்பக27 ஒட்டுமொத்தத்தில் ஒரு சுவையான விருந்து. அந்த விருந்தை திரையில் தவற விடாதீர்கள்.