கெனிஸ்டன் ஜோனின் ‘MARCUS’ – ஓகஸ்ட் 27 கொழும்பில் சிறப்புத்திரையிடல்

240

கெனிஸ்டன் ஜோன் இயக்கத்தில் றினோ ஷாந்த், இஷாரி குமாரசிங்க, கௌரி சங்கர் கௌரிஸ் மற்றும் தனிநாயகம் இளங்கோ ஆகியோர் நடிப்பில் உருவான ‘MARCUS’ திரைப்படம் எதிர்வரும் 27 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு இலங்கைத் தேசியத் திரைப்படக்கூட்டுத்தாபன தரங்கினி திரையரங்கில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

“யு“ தணிக்கைச் சான்றிதழைப் பெற்றிருக்கும் இந்தப்படமானது இலவச காட்சியாக திரையிடப்படுவதால் வாய்ப்புள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு திரைப்படக்குழுவினர் வேண்டி நிற்கின்றனர்.

கெனிஸ்டன் ஜோன் மற்றும் றியோ ஷாந்த் எழுத்தில் உருவாகியுள்ள இந்தத்திரைப்படத்திற்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை கெனிஸ்டன் ஜோனே கவனித்துள்ளார். Smith Asher Maximus இசையமைத்துள்ளார்.

கலை இயக்குனர்களாக Krishan Cool, John Rogistan, Douglas Sebasteen உம், ஒப்பனைக்கலைஞராக Dominique Ksacha உம் பணியாற்றியுள்ளதுடன், ஆடை வடிவமைப்பு பணிகளை raji modhana subramaniam, bonie, jospin ஆகியோர் கவனித்துள்ளனர்.