இணையத்தில் வரவேற்பை பெற்றுவரும் “வனவேட்டை 2“ திரைப்படம்

643

“வனவேட்டை” குறும்பட வெற்றியைத் தொடர்ந்து “வனவேட்டை 2” என்ற திரைப்படத்தை வன்னி மண்ணைச் சேர்ந்த பிரகாஷ் ராஜா இயக்கியுள்ளார். வன்னியின் பல இடங்களிலும் கனடா உள்ளிட்ட சில வெளிநாடுகளிலும் திரையிடப்பட்ட இந்த திரைப்படம் தற்சமயம் யு-ரியூப்பில் வெளியாகியுள்ளது.

TRM Picture வெளியீடாக வந்துள்ள இந்த திரைப்படத்தில் நவம், ஜக்சன், இதயராஜ், விதுசன், கீர்த்தனா, விஜயகுமார், மனோ, கமல், கார்த்தி, தேனுஷன், கஜானன், தீபன், லிங்கம், பிரியங்கன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

குலசிங்கம் பிரதாப்பின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப்படத்திற்கான படத்தொகுப்பு பணிகளை செல்வராஜ் தனுசன் மேற்கொண்டுள்ளார்.

தாயகத்தின் பல இடங்களில் பல காட்சிகள் திரையிடப்பட்ட இந்த “வனவேட்டை” திரைப்படம் திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் பலத்த வரவேற்பைப் பெற்றது. அண்மையில் இதன் வெற்றி விழாவைக்கூட சிறப்பாக முறையில் ஒழுங்கமைத்து கொண்டாடியிருந்தார்கள் படக்குழுவினர்.

Written & directed by Piragash Rajah
Cinematography – kulasingam pirathap ( biruntha studio )
Assistant Director- Jackson Kulas
Editing -selvaraj thanusan
Cast – Navam, Jackson, Ithayaraj Vithusan, Keerththana, Vijayakumar, Mano, Kamal, Karthi, Thenushan, Kajaanan, Theepan, Lingam, Piriyangan
Location manager – Vithusan, Kamal
Poster Design – MS Thanusan.