ரஞ்சனாஸ் சினி மெஜிக் நடாத்தும் ‘Golden Reel’ குறும்படப்போட்டி

240

”ரஞ்சனாஸ் சினி மெஜிக்” தனது 10ஆவது ஆண்டு நிறைவையொட்டி குறும்படப்போட்டி ஒன்றை நடாத்துகின்றது.

விதிமுறைகள்

ஒரு இயக்குனரினால் ஒரு குறும்படம் மட்டுமே அனுப்பி வைக்க முடியும்.

குறும்படம் 5 – 15 நிமிடங்களுக்குள் இருத்தல் வேண்டும்.

உங்களின் தனிப்பட்ட படைப்பாக இருக்க வேண்டும். படத்தின் உரிமை உங்களுடையதாக இருத்தல் அவசியம்.

வேறு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருக்கக்கூடாது.

இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.

குறும்படம் எந்தவொரு சமூக விதிமுறைகளையும் மீறும் வகையில் அமைந்திருக்கக்கூடாது.

இலங்கை, இந்திய சினிமா கலைஞர்களினால் குறும்படங்கள் பார்வையிட்டு தெரிவுசெய்யப்படும்.

இப்போட்டியில் கலந்து கொள்ள எந்தவொரு கட்டணமும் தேவையில்லை.

தெரிவு செய்யப்படும் குறும்படங்கள் ரஞ்சனாஸ் சினி மெஜிக் யு-ரியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

மேலதிக விபரங்களுக்கு 0764160628

குறும்படத்தை கூகுள் ட்ரைப் மூலமாக 0702681505 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு அல்லது ranjanacinemagic@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.