பதின்ம வயது திருமணத்தை பற்றி பேசும் “சேறு” குறும்படம்

269

பதின்ம வயது திருமணத்தை பற்றி பேசும் “சேறு” என்கிற ஈழத்து குறும்படம் நாளை ஞாயிற்றுக்கிழமை (06) மாலை 3 மணிக்கு சாவகச்சேரி “பாலா” திரையரங்கில் திரையிடப்படவுள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் படக்குழுவினர் இதனை தெரிவித்தனர்.

குறித்த குறும்படத்தை மூன்று பாடசாலையில் திரையிட்டத்தாகவும் அனைத்து பாடசாலை மாணவர்களும் இதனை பார்க்கவேண்டும் என்ற படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர்.

லிப்ஸிஜாவின் இயக்கத்தில் வெளியாகவுள்ள குறும்படத்தில் ஒளிப்பதிவை சசிகரன் யோவும் இசையை பிரசாந் கிருஸ்ணபிள்ளையும் ஒளியமைப்பை ஜெனிஸ்ரனும் ஒப்பனையை டேறியனும் கலை இயக்குநராக ஜொனாத்தும் படத்தொகுப்பு மற்றும் தயாரிப்பு மேற்ப்பார்வையை விமல்ராஜ்ம் ஆங்கில உபதலைப்பை சர்மிலக்சனும் பின்னணி குரலை தமிழரசி,சிவராசா ஆகியோரும் மேற்கொண்டர்.

குறும்படத்தில் நடிகர்களாக துர்க்கா மகேந்திரன், டேறியன், டினேஸ், ஜொனாத், கஜனி, சுபாஷினி, புஸ்பராணி, அம்பலம் பணியாற்றியுள்ளனர்.