பூர்விகா நடிப்பில் ‘உயிர்’ குறும்படம்

1062

இலங்கையின் முன்னணி தமிழ் மொடல் அழகியாகவும் நடிகையாகவும் விளங்கும் பூர்விகா மற்றும் நடிகர் ராம் இணைந்து நடிக்கும் குறும்படம் ‘உயிர்’. இதன் முதற்பார்வையை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.


கிருத்தீபன் செல்வா வழங்கும் இப்படத்தை பிரகாஸ் இயக்கியுள்ளார். வினுசன், நிரோசன், அபிசேகன், துசியந்தன், சரவணன், சாலமோன், நிமோ, துவா ஆகியோர் படக்குழுவில் இடம்பிடித்துள்ளனர்.


அண்மைய காலங்களில் அதிகளவு காணொளிப்பாடல்கள் மற்றும் மொடல் படப்பிடிப்புக்களில் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கும் பூர்விகா நடித்துள்ள இக்குறும்படத்திற்கு இப்பொழுதே வரவேற்பு அதிகமாகியுள்ளதை சமூக வலைத்தளங்களில் காண முடிகின்றது.