பசுமையான நினைவுகளுக்கு அழைத்துச் சென்ற “கூட்டாளி” பாடல்

860

தமிழ் படைப்பகம் சார்பில் ஈசன் சரண் தயாரிப்பில் ஸ்ரீ நிர்மலன் இசையில் வெளியாகியுள்ள அட்டகாசமான பாடல் “கூட்டாளி”.

இந்தப்பாடலுக்கான வரிகளை லதீப் பாலசுப்ரமணியம் எழுதியுள்ளதுடன், யாழவன் சிவா பாடியுள்ளார்.

காணொளிப்பாடலுக்கான ஒளிப்பதிவை வட்சு மேற்கொண்டுள்ளதுடன், படத்தொகுப்பு பணிகளை கதிர் கவனித்துள்ளார். சிறப்பான நடன இயக்கம் அமைத்து பாடலை இயக்கியுள்ளார் ஊரெழு பகி.

கூட்டாளி பாடலில் ஊரெழு பகியுடன் ருவித்தா உதயகுமார், ஸ்ரீ நிருஷன், சிவா சர்மி மற்றும் பல நடனக்கலைஞர்கள் நடித்துள்ளார்கள்.

சிறு பிராயம் முதல் வயது வந்தோர் வரை நான்கு கால கட்டங்களாக பாடல் நகர்கின்றது. முடிந்தவரை 04 கால கட்டங்களையும் வித்தியாசப்படுத்துவதற்காக உழைத்திருக்கிறார்கள். அந்த வகையில் கலை இயக்கம் மற்றும் ஒப்பனை என்பன சிறப்பாக இருக்கின்றன.

வட்சுவின் ஒளிப்பதிவு வழமை போலவே அட்டகாசம், 04 வயதுப்பருவங்களையும் வேறுபடுத்தி நிறைவான ஒரு படத்தொகுப்பை தந்திருக்கின்றார் கதிர்.

ஊரெழு பகி – ஸ்ரீ நிர்மலன் “இளந்தாரி” கூட்டணியை பலரும் மறந்திருக்க மாட்டீர்கள். இன்னுமொரு ஹிட்டுக்கான உழைத்திருக்கின்றார் இசையமைப்பாளர் ஸ்ரீ நிர்மலன். இலங்கைக்கே உரித்தான பைலா பாணியில் இன்றும் கேட்கக்கூடிய வகையில் பாடல் அருமையாக இருக்கின்றது.

மொத்தத்தில் நிறைந்த கலைஞர் பட்டாளத்தை வழிப்படுத்தி, நெறிப்படுத்தி மற்றுமொரு ஹிட்டடித்திருக்கிறார் ஊரெழு பகி என்று தான் சொல்ல வேண்டும்.

Music : Sri Nirmalan
Direction : Urelu Baki & Team
Singer : Yaalavan Siva
Lyrics : Latheep Balasubramaniam
Choreography : Urelu Baki
DOP : Watsu
Edit : Kathir
Mix & Mastering : SN Music Studio
Cast : Urelu Baki Ruviththa Uthayakumar Sri Nirusan Siva Sarmi
Art : Kantha IEL Rexsan
Production Manager : Nallaiya Kajeepan Nivethikan Kajanstan Vinoyan Jekath

Assistant Director : Shoban Suman Nikshan T.Kanistan

Camera Assistant : SS Kemal