ஜோயலின் “பேசா மொழிகள்” குறும்படம்

324

“யுத்தத்தில் வெற்றிகள் என்று எதுவும் இல்லை.. இழப்புக்கள் மட்டுமே” என்கிற கருத்துடன் ஜோயல் இயக்கத்தில் வெளிவந்துள்ள குறும்படம் “பேசா மொழிகள்”.

இதில் யதர்சினி, பேபி ஏஞ்சல், சோழவேந்தன், ரதி, மெர்சி ஆகியோர் பிரதான பாத்திரங்களிலும் அருண், சுபோன், சதாகரன், மோகன், துலாஞ்னி, சிறிகரன் ஆகியோர் துணைப்பாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – படத்தொகுப்புடன் இக்குறும்படத்தை இயக்கியுள்ளார் ஜோயல். இசை பென் சவுண்ட் மற்றும் ஜீவநாத். உதவி இயக்கம் – கிஷோ.

சிறுவயதில் போரால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட பெண் பிள்ளை வளர்ந்த பின்னும் போர் குறித்தான அச்ச சூழலுக்குள்ளேயே வாழ்வதால் அவரது அன்றாட நடவடிக்கைகளை கூட தடைப்படுவதாக கதை அமைக்கப்பட்டிருக்கின்றது.

இருக்கின்ற வளங்களை வைத்துக்கொண்டு தேசிய குறும்படப்போட்டிக்காக இப்படைப்பை தான் செய்ததாக குறிப்பிட்டிருக்கும் இயக்குனர் ஜோயல், இக்குறும்படம் இங்கிலாந்தின் The Lift off Sessions சர்வதேச குறும்பட போட்டிக்கு தெரிவாகி திரையிடப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.