கல்யாணம், குழந்தை, குடித்தனம் – பீதி கொள்ள வைக்கும் மணிவாணனின் ‘Family Package’

628

இயக்குனர் மணிவாணனின் “Family package” குறும்படத்தின் முதற்பார்வையே (first look) கொஞ்சம் கிலி கொள்ள வைத்தது. காரணம் இயக்குனர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் என்று எல்லோரும் இருந்தும் ஒளிப்பதிவாளர் மிஸ்ஸிங்… ஒளிப்பதிவாளர் இல்லாமல் ஒரு படமா? சாத்தியமா? என சிந்தித்த போதே ‘selfie cam’ என அதில் நடித்தவர்கள் இருவரின் பெயர் இருந்தது. அப்போது புரிந்தது “இது வித்தியாசமான படம்”.

எதிர்பார்ப்புக்கு எந்த ஏமாற்றமும் இல்லாமல் படம் அமைந்திருக்கின்றது. டைட்டிலுக்கு ஏற்றாற்போல் எல்லாவற்றுக்கும் ஒரு package.. குழந்தை வளர்ப்பு உற்பட! காலமாற்றம் மற்றும் சமூக மாற்றத்திற்கேற்ற வித்தியாசனான சிந்தனை மாற்றம் ! வாழ்த்துக்கள் இயக்குனர் மணிவாணன்.

சொல்லவந்த விடயத்தினை மிக நேர்த்தியாக , தொய்வில்லாமல் கண்ணிமைக்கும் நேரத்தினுள் சொல்லிச்சென்றிருக்கும் timing, பின்னணி இசை, மற்றும் குறுஞ்செய்தியுடன் ஆரம்பிக்கும் கதை
படக்குழுவினரின் விவரங்களோடு குறுஞ்செய்தி வடிவில் முடிவுறும் காட்சியமைப்பு, family package என்கிற அந்த logo என பல விடயங்கள் அட்டகாசமான கற்பனை.

முக்கியமாக நாயகன், நாயகியாக நடித்திருக்கும் அந்த இருவரின் நடிப்பு, அதிலும் குறிப்பாக இளைஞனின் யதார்த்தமான முகபாவம் பாராட்டக்கூடியது. உரையாடல்களில் கொஞ்சம் தெளிவின்மை இருப்பதுபோல் தெரிந்தது. ஆனாலும் இது பரிசோதனை முயற்சி, அதுவும் நடித்தவர்களே ஒளிப்பதிவு செய்திருக்கின்றார்கள். எனவே, சிறுசிறு குறைகளை பொறுத்தருளலாம்.

இந்தக் கொரோனா, ஊரடங்கு, முடக்கம், பயணத்தடை எல்லாம் எம்மை பல விதத்தில் மாற்றியிருக்கின்றது. இணையமே உலகமாகிப்போனது. வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கடையில் இருந்து கூட ஒன்லைனில் பொருட்களை தருவிக்கின்றோம். திருமணங்கள் காணொளிக் காட்சியில் நடக்கின்றன. இப்படியே போனால், பிள்ளை பெறுவது… குடித்தனம் நடத்துவது எல்லாம் இணையத்திலேயே நடந்து விடுமா என அச்சம் கொள்ள வைக்கின்றது. நவீனம் அதைச் சாத்தியமாக்கும் என்பதும் நாங்கள் அறியாத ஒன்றல்ல…

Directed By – Nadaraja Manivanan
Casting & selfie Cam – Sachin Senthilkumaran & ZeMira AbeSingha
SFX & Music – Siva Pathmayan
Editing – Suga Sugantha
Poster Design – Mujahid Muja