சமூக அக்கறையுடன் ருவுதரன் படைத்த “பேருந்து” குறும்படம்

347

அம்மா புரொடக்ஷன் தயாரிப்பில் ருவுதரன் சந்திரப்பிள்ளை இயக்கியுள்ள குறும்படம் “பேருந்து”. பொதுப்போக்குவரத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இக்குறும்படத்தில் ஷைனுஜா, தரிந்தி, ஜெவோன், கிர்ஷான், ஷமஹில், அதீக், பிரஷாந் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு அஜய் ரிமிநாத், படத்தொகுப்பு யாசிர் நிஷார்டீன், இசை மற்றும் சிறப்பு சப்தம் பிரணவன் ஜெயகுமார்.

“பொதுப்போக்குவரத்தில் 87% ஆன பெண்கள் ஒருமுறையாவது பாலியல் இம்சைக்கு உள்ளாகியிருக்கின்றனர்” எனக்குறிப்பிடுகின்றார் படத்தின் இயக்குனர் ருவுதரன். இந்த விகிதம் எந்தளவுக்கு உண்மை என்பது ஆராயப்பட வேண்டும். ஆனால், பெண்களுக்கு பொதுப்போக்குவரத்தில் பாலியல் ரீதியான சீண்டல்கள், துன்புறுத்தல்கள் நிகழ்கின்றமை மறுக்க முடியாத உண்மையாகும்.

இதே கருவை ஒத்த குறும்படம் ஒன்றை கடந்த வருடம் இயக்குனர் லிங் சின்னா “ஹீப்ரு லிலித்” என்கிற பெயரில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று தனது பேஸ்புக் பதிவில் சில விடயங்களை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இக்குறும்படங்களின் கதை பொதுவான ஒன்று எனினும், தான் எழுதி, நிராகரித்த சில காட்சிகள் இக்குறும்படத்தில் இடம்பெற்றிருப்பதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். உண்மையில் இங்கு நடந்தது என்ன என்பதை உரிய தரப்பினர் தான் தெளிவு படுத்த வேண்டும்.