நாளை வெளியாகிறது பகிடியா கதைப்பம் அணியின் “OTP” திரைப்படம்

135

தமது நகைச்சுவைக் காணொளிகள் மூலம் பலரையும் கவர்ந்த “பகிடியா கதைப்பம்” குழுவினரின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘OTP’ (ஒரு ட்ரிப் போவம்” திரைப்படம் நாளை (05) வெளியாகிறது.

ஜோய் ஜெகர்த்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத்திரைப்படத்தின் முதல் காட்சி நாளை மாலை 06.30 மணிக்கு யாழ். ராஜா திரையரங்கில் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றது. தொடர்ந்து நாளை மறுதினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களிலும் மாலை 04 மணி மற்றும் இரவு 07 மணி காட்சிகளாக இந்தத் திரைப்படம் காண்பிக்கப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன் இந்தத்திரைப்படத்திற்காக (டிக்கெட்) முழுமையான வரி விலக்கு பெற்றிருப்பதாகவும் படக்குழு மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாது தணிக்கை குழுவிடம் இருந்து “யு” தர சான்றிதழும் (அனைத்து வயதினரும் பார்க்கக்கூடிய படம்) கிடைக்கப்பெற்றுள்ளது.

நெவிலின் ஒளிப்பதிவிலும் நிவேனின் படத்தொகுப்பிலும் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்திற்கு பிரசாந் கிருஷ்ணபிள்ளை இசையமைத்துள்ளார்.

பிரசன்னா, பிரகாஷ், ராஜா மகேந்திரசிங்கம், அரவின் ரமணன், ஆர்.மனோஜ், கிறிஸ்தோபர், ஜோய் ஜெகர்த்தன், ஆர்.கே.ஸ்டார்க், எஸ்.கே.தனா, லர்ஷிகா, கரன், கே.எஸ்.சங்கர், அலெஸ்டீன் ரொக் ஆகியோர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.